ஆரஞ்சு பர்பி- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழங்கள்-4; சர்க்கரை சேர்க்காத கோவா-400 கிராம்;சர்க்கரை-400 கிராம்; முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கியது- 2 டேபிள் ஸ்பூன்; ஏலக்காய்த் தூள்-1டீ ஸ்பூன்;
செய்முறை:
ஆரஞ்சு புழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
கோவாவை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதனை அடி கனமான பாத்திரத்தில் கொட்டி, அதில் சர்க்கரையைக் கலக்கவும்.
இந்தக் கலவையை அடிப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியாகும் வரை கிளறவும். பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.இப்போது கலவை சற்றே நீர்த்துப் போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும். கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும். ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பறிமாறவும்.
***********************************
Jun 182022