இரைப்பையில் அமில நீக்கிகள்:
மனித்ன் உண்ணு,ம் உணவு உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவு இரைப்பையின் உட்சுவரில் சுரக்கும் அமிலங்கள் உணவுடன் வினை புரிந்து அதை செறிவடையச் செய்கிறது.
இரைப்பையில் சுரக்கும் அமிலங்களுள் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் (HCL) அடங்கும். நமக்கு மன அழுத்தம் அதிகமாகும்போது இந்த அமிலம் அதிகமாகச் சுரக்கும். இதனால் இரைப்பையில் அரிப்பு ஏற்பட்டு புண் ஏற்படக் காரணமாகிறது. அதாவது ( HCL) அமிலத்தின் செறிவு 0.082M . இது 0.1 M அளவிற்கு அதிகரிக்கும்போது இரப்பையின் உட்புறச் சுவர்கள் அரிக்கப்படுகின்றன. இடன் விளைவாக நெஞ்செரிச்சல் (Heartburn) ஏற்படும். அமலச் செறிவை சீராக்க அமில நீக்கிகள் (antacids) உதவுகின்றன.
அமிலச் செறிவை அமில நீக்கிகள் எப்படி நீக்குகின்றன?
அமில நீக்கிகளில் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு Al(OH) மற்றும் மக்னீஷியம் ஹைட்ராக்ஸைடு Mg(OH) அடங்கி இருக்கும். இவை இரைப்பையில் அதிகம் உள்ள அமிலத்தை சமப்படுத்தும்.
*****************************
Apr 262022