உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது
• உடலுக்கு குறைந்த அளவு தூக்கம் போதுமானது: இது உண்மையல்ல. உடலுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் தேவை. இதற்கும் குறைவாகத் தூங்கினால், பலில் உடலுக்கு உற்சாகம் கிடைக்காது. சோர்வாகவே இருக்கும். சில வாரங்களில் இந்த சோர்வு உடலுக்கு பழகிவிடும். ஆனால் உடலும் மனமும் தூக்கப் பற்றாக்குறை காரணமாக வளர்சிதை மாற்றம் இதயம், ஹார்மோன் சுரப்பு தொடர்பான பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம். மேலும் முடிவு எடுப்பது, புதுமைத் திறன், கவனம் குவிக்கும் திறன் ஆகியவற்றில் தடுமாற்றம் ஏற்படும்.
• செயற்கை இறைச்சி பாதுகாப்பானது அல்ல: உண்மையல்ல. விலங்குகளின் ஸ்டெம் செல்களிலிருந்து செயற்கை இறைச்சி பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறது. சாதாரணமாக இறைச்சி வெட்டப்பட்டு விற்கப்படும் கடைகளில் ஆபத்தான் அஈ கோலி பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளது. ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு நுண்ணுயிர்களை அகற்ற சுத்திகரிக்கப்படுவதால், பயப்பட அவசியமில்லை.
• செயற்கை இறைச்சியில் ஊட்டச் சத்துகள் உண்டு: உண்மை. செயற்கை இறைச்சி தயாரிக்கப்படும்போது, புரதமும் கொழுப்பும் சேர்க்கப்பட்டு விடுகிறது. பிற ஊட்டச் சத்துகளான ஒமேகா-3 வைட்டமின் பி12 ஆகியவற்றையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கையாகப் பெறும் இறைச்சியில் உள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பைத் தவிர்க்க முடியும். தேவையான சத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
• இரண்டுக்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை அணிந்தால், கோவிட் 19 தொற்றாது: உண்மையல்ல.. ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால், அதைப் பிறருக்குப் பரவாமல் தடுக்கவும் பிறரிடமிருந்து இருமல், தும்மல் மூலம் ஒருவருக்கு நோய்த் தொற்று பரவாமல் இருக்கவும் மாஸ்க் உதவுகிறது. KN/N95/FFP2/3 வகை மாஸ்குகளை அணிந்தாலே போதுமானது. இந்த வகை மாஸ்குகளில் பல்வேறு அடுக்குகள் இருப்பதால், வைரஸ்களை எளிதாக தடுக்க முடியும். துணியில் செய்த மாஸ்குகளை மூக்கையும் வாயையும் சரியாக மூடியபடி இருக்குமாறு அணிந்தாலே போதுமானது.
• சத்தியம் செய்வது மன உறுதியை வலிமைப்படுத்தும்: உண்மைதான். உணர்ச்சிபூர்வமாக சத்தியம் செய்யும்போது மூளைக்குச் செல்லும் தகவல் வாழ்வா சாவா போராட்டத்தைத் தெரிவிக்கும். இதனால் உடலும் மனமும் அதற்கேற்ப தயாராகும். ஆனால் இந்தச் சூழல் தற்காலிகமானதுதான். இப்படிச் சத்தியம் செய்யும்போது உடல் வலியைத் தாங்கிக்கொண்டு சவால்களை செய்துமுடிக்கத் தயாராகும். அதற்காக அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு சத்தியம் செய்தால், உடலில் வலியைத் தங்கும் திறன் குறையும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
***************************