எலிக் காய்ச்சல்-கரணமும் பரிசோதனைகளும்
• எலிக் காய்ச்சல் என்றால் என்ன?
‘லெப்டோஸ்பைரா’ என்னும் பாக்டீரியா கிருமிகள் பதிப்பால் ஏற்படும் தொற்று.
• இந்தக் கிருமி எப்படி பரவுகிறது?
மழைக் காலத்தில் தேங்கிய மழை நீரில், எலிகள் சிறுநீர் கழிக்கும். அதில் ‘லெப்டோஸ்பைரா’ கிருமிகள் இருந்தால, செருப்பு அணியாமல் அந்த நீரில் நடந்தால், கிருமிகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உண்டு.
• அறிகுறிகள் என்ன?
ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் வரும். அதன்பின் கடுமையான காய்ச்சல், தீவிர தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு தொற்றின் மூதல் கட்ட அறிகுறிகள். இவற்றில், ‘சிவந்த கண்கள்’ முக்கிய அறிகுறி. மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக் கசிவு, சிறுநீரிலும், மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இரண்டாம் கட்ட அறிகுறிகள்.
• எலிக் காய்ச்சலால் உடல் உள்ளுருப்புகள் பாதிக்கும் அபாயம் உள்ளதா?
கல்லீரல், சிறுநீராக்ம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை என முக்கிய உறுப்புகளை நோய் தொற்று தாக்கும். கவனிக்கத் தவறினால், இதயம் மற்றும் மூளையைப் பாதித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
• இந்தக் காய்ச்சலை எவ்வாறு கண்டறியலாம்?
சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரில், ‘லெப்டோஸ்பைரா’ கிருமிகள் இருப்பதை, மைரோஸ்கோப் உதவியுடன் உதவி செய்ய முடியும்.
• எம்.ஏ.டி.(Microscopic Agglutination Test MAT)