ஒருவரது பிறவியிலேயே அவரது அறிவுக் கூர்மை தீர்மானிக்கப்படுகிறது
1.ஒருவரது பிறவியிலேயே அவரது அறிவுக் கூர்மை தீர்மானிக்கப்படுகிறது: உண்மையல்ல. ஒருவரது திறமையை சிலர் பாராட்டிப் பேசும்போது, திறமை பாரம்பரியமாக ரத்தத்திலிருந்து வந்தது என்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒருவரது அறிவுத் திறன் காலம் தோறும் கற்கும் விஷயங்களைப் பொறுத்து மாறக்கூடியது. பிறக்கும்போது தனக்கு அறிவுக்கூர்மை இல்லை என்று ஒருவர் சோர்ந்துவிட்டால், அவரிடமிருந்து முயற்சியும் உழைப்பும் வெளியே வராது, என்றார் ஸ்டாஃபோர்ட் உளவியலாளர் கரோல் வெக்.
2. தொடர்ச்சியாக எழுப்பப்படும் ஒலி மன நிலையைப் பாதிக்கும்: உண்மைதான், கட்டுமான ஒலி, வாகன இரைச்சல், ஆகியவை தற்காலிகமாக மனநிலையைப் பாதிக்ககூடியவை. இதில் நீர் விழும் ஒலி, சூயிங்கம் மெல்லுதல், ஆணி அடித்தல் போன்று தொடர்ச்சியாக எழுப்பும் ஒலிகளால், மிசோபோனியா (Misophonia) எனும் குறைபாடு கூட உருவாகிறது. ஆனால் இது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டும் அரிதாக ஏற்படும். இதன் விளைவாக ஒலியைக் கேட்பவருக்கு பதற்றம் ஏற்பட்டு, தாம் செய்துகொண்டிருக்கும் பணியைத் தொடர முடியாமல் தடுமாறுவர்.
3. தானியங்கி இயந்திர முறை மனிதர்களுக்கு மாற்றானது: உண்மையல்ல. ஒரேவிதமான செயல்களை அதிகம் செய்யக்கூடிய பணிகளில் தானியங்கி ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் இவை இவை குறிப்பிட்ட கோடிங்குகள் மூலம் இயங்குபவை. அதனால், மனிதர்களுக்கு நிகரானவை அல்ல. மனிதனுக்கு அதிக ஆபத்து கொண்ட இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்துவதால், வேலை நேரம் குறைகிறது, மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது .
4. தானியங்கி இயந்திர முறையில் தவறு நேராது: உண்மையல்ல. ரோபோக்கள் தானியங்கி முறையில் இயங்கினாலும் அவையும் மனிதர்கள் போல தவறு செய்பவைதான். கோடிங் எழுதும் முறையில் ஏற்படும் தவறுகளால், ஒரே தவறு பலமுறை நிகழும் ஆபத்தும் உண்டு, மனிதர்களாக இருந்தால்கூட தவறைப் பார்த்து திருத்திக் கொள்ளலாம். ஆனால் இம்முறையில் பொருட்களின் தரத்தை மனிதர்கள் பார்த்து சோதித்துக்கொள்வது அவசியம்.
5. தானியங்கி இயந்திர முறை அனைத்து துறைகளுக்கும் ஏற்றதல்ல: உண்மையல்ல. வங்கி, நிதி, சில்லறை விற்பனை போன்ற பல்வேறு துறைகளிலும் திரும்பத் திரும்ப செய்யும் செயல்பாடுகளை தானியங்கி முறையில் செய்யலாம். குறிப்பிட்ட விதிகளின்படி, தொடர்ச்சியாக செய்யும்படி, டிஜிட்டல் முறையில் தகவல்களை உள்ளீடு செய்யும் முறையில் பணிகள் இருந்தால், அவற்றில் தானியங்கி இயந்திரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
6. தானியங்கி இயந்திர முறைக்கு ஏராளமான கோடிங்குகள் தேவை: உண்மையல்ல. தானியங்கி இயந்திர செயல்பாட்டிற்கு பயன்படுவது உண்மை. ஆனால் இந்த இயந்திரங்கள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதே முக்கியம். ஒரே விதமான செயல்பாடுகளைத் திரும்ப செய்வதற்காகத்தான் கோடிங்குகள் எழுதப்படுகின்றன. எனவே அதில் சிக்கல் இருக்காது.
***************************
May 172022