கண் பார்வை இல்லாதவர்களால் கனவில் காட்சிகளைக் காண முடியுமா?
சிலருக்கு பிறக்கும்போது இல்லாமல், மெல்ல மெல்லத்தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது. அவர்களது கனவில் பார்வை போனபோது அவருடைய உறவினர்கள் எந்த முக ஜாடையோடு இருந்தார்களோ அதே வடிவில்தான் இருப்பார்களாம். புதிய நபர்கள் கனவில் தோன்றும்போது கற்பனை முகஜாடைதான் வருமாம்.
பார்வையின்றி பிறப்பவர்களுக்கு சத்தம், தொடு உணர்வு சம்பந்தமானவை மட்டுமே கனவாக வரும். கனவு என்பது வெறும் காட்சி உணர்வு மட்டுமல்ல. தொடுதல், கேட்டல் என ஐம்புலன்களின் உணர்வும் கனவில் ஏற்படும். பார்வையற்றவர்களுக்கு காட்சி வரவில்லை மற்ற உணர்வுகள் கனவில் வரும்.
டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிறவியிலேயே பார்வையற்றவர்கள், இடையே பார்வை இழந்தவர்கள், பார்வை உள்ளவர்கள் எனத் தேர்வு செய்து, 4 வாரம் அவர்கள் கண்ட கனவுகளைத் தொகுத்தபோது முடிவு வியப்பாக இருந்தது.
பார்வையுள்ளவர்கள் வெறும் 7% பேரும், பார்வை பறிபோனவர்கள்18% பேரும், பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் 26% பேரும் கனவில் சுவை உணர்வைக் கண்டதாகக் கூறினர். 40% முகர்தல், 67% தொடுதல் 93% கேட்டல் போன்ற உணர்வுகளைக் கனவில் அனுபவித்ததாக பார்வை இழந்தவர்கள் கூறினர். ஆனால், பார்வையுள்ளவர்கள் இடையே இது முறையே 15%, 45%, 64%தான் இருந்தது. அதாவது பார்வைக்கு ஈடாக மற்ற புலன்களின் உணர்வு பார்வையற்றவர்களுக்கு அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
^^^^^^^^^^^^^^^^^^