Nov 182022
 

கம்பு வெந்தயக் கீரை ரொட்டி- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
கம்பு மாவு-100 கிராம்; கோதுமை மாவு-100 கிராம்’னறுக்கிய வெந்தயக் கீரை- 1 கப்; ஜீரகம், ஓமம், தயிர், மிளகய்த் தூள்- சிறிதளவு; உப்பு, தண்ணீர், எண்ணெய், வெண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
கம்பு மாவு, கோதுமை மாவு, ஜீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூல், தயிர் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை யைக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் சப்பாத்தியாக உருட்டி, தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்தபின் வெண்ணெய் தடவவும் . சுவையான கம்பு வெந்தயக் கீரை ரொட்டி தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)