கரப்பான் பூச்சி மருந்து:
கரப்பான் பூச்சி நோய் தீர்க்கும் அரிய மருந்து தயாரிக்க உதவுகிறது.முக்கியமாக ‘பிராங்கியம் ஆஸ்துமா’என்ற நோய்க்கு மருந்தாகிறது. இடைவிடாத மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளீயின் இன்னலைத் தீர்க்க இந்த மருந்து உதவுகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர் டாக்டர் கிரிஸ்டியன் பிரெடெரிக் சாமுவேல் ஹானிமன் அலோபதிக் மருத்துவத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மருத்துவத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து ‘ஹோமியோபதி’ என்ற மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்.
இந்த மருத்துவ முறையில், ‘பிராங்கியல் ஆஸ்துமா’ நோய்க்கு ‘பிளாட்டா ஓரியன்டாலிஸ்’ என்ற மருந்து திரவத்தை உரிய முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கலாம்.
அலோபதி மருத்துவத்தில், ஊசி மூலம் மருந்து செலுத்தி மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள நோயாளியின் மூச்சுத் திணறலைக்கூட கரப்பான் பூச்சி மருந்தால் எளிதாக தணிக்கலாம்.
ஒரு கரப்பான் பூச்சியின் தலையை மிகச் சரியாக அறுத்து உடலில் இருந்து அகற்றிவிட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழும் திறன் கொண்டது. பின் உணவு உட்கொள்ள முடியாமல்தான் அது இறக்கிறது. அதாவது பசியால்தான் மரணமடைகிறது.
**********************************
Nov 172021