Sep 272022
 

கலப்படம்:

உணவுப் பொருட்களில் காப்படம் செய்வ்டஹு காலம் காலமாக நடந்து வருகிறது. கலப்படம் செய்த பொருட்களை வாங்குவதால், பணத்திற்கும் கேடு ; உண்பதால் உடலுக்கும் கேடு.
உணவுப் பொருட்களில் கலப்படங்களைக் கண்டறிய உணவியல் நிபுணர்களும் வேதியல் நிபுணர்களும் தேவை இல்லை. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை நாமே தெரிந்துகொள்ளலாம்.
பால்:
நீண்ட காலமாக நடந்துவரும் கலப்படப் பொருட்களில் பாலும் ஒன்று. பாலில் தண்ணீரைக் கலப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய காலக் கட்டத்தில் பாலில் சோப்புத்தூள் கலந்து விற்பது பரவலாக நடந்து வருகிறது.
ஒரு ட,ம்ளரில் சிரிதளவு பால் மற்றும் அதே அளவு தண்ணீரைக் கலந்து நன்கு தண்ணீரைக் கலந்து குலுக்கினால், சோப்புத்தூள் கலக்காதது என்றால், சிறிய அளவு நுரை மட்டுமே பாலின் மேற்பரப்பில் இருக்கும். சோப்புத்தூள் கலந்தது என்றால், அதிக அளவிலான நுரை பாலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும்.
இதன் மூலம் கலப்படம் உள்ளதா என அறிய முடியும் .
சர்க்கரை:
சுண்ணாம்புத்தூள் சேர்ந்த கலப்பட சர்க்கரை விற்பனை அமோகமக நடக்கிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு டம்ளர் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைக் கொட்டிக் கலக்க வேண்டும்.
சுண்ணாம்புத்தூள் கலந்த சர்க்கரையாக இருந்தால், அடிப் பகுதியில் சுண்ணாம்புத்தூள் படிந்திருக்கும். நல்ல சர்க்கரையாக இருந்தால், சர்க்கரை அனைத்தும் கரைந்து போயிருக்கும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் வேறு எண்ணெயைக் கலப்பதும் நடக்கிறது. தேங்காய் எண்ணெயை 1 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்தால், சுத்தமான தேங்காய் எண்ணயாக இருந்தால், உறைந்து விடும். உறையாமல் அப்படியே இருந்தால், கலப்படம்தான்.
மிளகு : மிளகில் பப்பாளி விதையைக் கலப்படம் செய்வர். முறத்தில் போட்டு புடைத்தால் பப்பாளி விதை கீழே விழுந்து விடும்.
இதே போல் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றிலும் கலப்படம் செய்வதால், தூளாக வாங்கவேண்டாம். மேற்கூறியவற்றை தனித் தனியாக வாங்கி வெய்யிலில் காய வைத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த பொருளை வாங்கினாலும் நன்கு ஆராய்ந்து வாங்கினால்தான் நமக்கும் நம் உடல் நலத்துக்கும் நல்லது.
——————-

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)