காட்டு விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு
!. காட்டு விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு:அளவுக்கு அதிகமாக சாப்பிடும் அனைத்து விலங்குகளுக்கும் உடல் பருமன் பிரச்சினை உண்டு. 2019ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் பென்ஷெய்ம் நகரில் பாதாளச் சாக்கடைத் துளையில் மாட்டிக்கொண்ட குண்டு எலியை தீயணைப்புப் படையினர் மீட்டனர். சீல், வால்ரஸ், துருவக் கரடிகள் குண்டாக உள்ளன எனப் பலரும் நினைப்போம். அவை உயிர் பிழைப்பதற்காக உணவைச் சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவை என்பதால் அவை பருமனாகத் தெரியலாம்.
2. கண் இமைகளை மெல்ல சிமிட்டினால், பூனையுடன் நட்பாகலாம்: கேட்க கிண்டலாகத் தோன்றினாலும், இங்கிலாந்திலுள்ள சசெக்ஸ், போர்ட்மெனத் பல்கலைக் கழகங்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். பூனை கண் இமைப்பதைப் போன்றே செய்தால் போதும். அதுவும் திருப்பி இமைக்கும். இப்படியே அதனுடன் நட்பாக முடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள். பூனை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிலர் இதனை முன்னமே கண்டுபிடித்திருந்தாலும் அறிவியல்பூர்வமான நிரூபணம் தற்போது கிடைத்துள்ளது.
3. எதிர்மறைச் செய்திகளுக்கு மனம் முக்கியத்துவம் அளிக்கிறது: பத்திரிக்கைகள் ஊழல், படுகொலை, லஞ்சம், அவதூறு ஆகிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன. மக்களும் அதனை ஆர்வமாக வாங்கிப் படிக்கின்றனர். 2014ம் ஆண்டு அமெரிக்கா, கனடா நாட்டு ஆய்வாளர்கள் செய்திகளை வாசிப்பவர்களின் கண்களின் அசைவை ஆராய்ந்தனர். இதில் வலைத் தளத்தில் எதிர்மறைச் செய்திகளைப் படித்து அதனை ஆராய்வதில் மக்கள் ஆர்வமாக இருந்தது தெரிய வந்தது. மிக்ஸிகன் பல்கலைக் கழகம் 17 நாடுகளில் செய்த ஆய்வில், எதிர்மறை செய்திகளைப் படித்து மக்கள் உணர்ச்சிகர எதிர்வினை ஆற்றியதைப் பதிவு செய்துள்ளது
4. சூரியனின் செயல்பாடே பருவநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணம்:- சூரியனில் உள்ள கருப்பான இடங்களில் (sunspots) காந்தப்புலம் வலுவாக இருக்கும். இப்படி சன்ஸ்பாட்டுகள் உருவாவதும் கூட தோராயமக 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சன் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 200 ஆக எதிர்காலத்தில் அதிகரிக்கும்போது, சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பம் அதிகரிக்கும். பூமி பெறும் வெப்பம் வழக்கத்தைவிட 0.1% மட்டுமே அதிகரிக்கும் என்கிறார்கள், சூழல் வல்லுனர்கள். மனிதர்களின் செயல்பாடுகளால் உயரும் கார்பன் உமிழ்வுதான் பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமே தவிர , சூரியன் அல்ல.
*************************************
May 122022