கிச்சு கிச்சு மூட்டும்போது ஏற்படும் சிரிப்பு, உடலின் தற்காப்பு நடவடிக்கை
• கிச்சு கிச்சு மூட்டும்போது ஏற்படும் சிரிப்பு, உடலின் தற்காப்பு நடவடிக்கை: உடலில் அக்குள், தொண்டைக்கு அருகில், பாதம் ஆகிய பகுதிகளில் கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு வரும். இச் செயல்பாடு மூளையில் வலியுணர்வை ஏற்படுத்துகிறது. இதைச் சமாளிக்கும் விதமாகவே சிரிப்பு உருவாகிறது என்று ஜெர்மனியின் ட்யூபின்சென் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தோலில் உள்ள சோமாடோசென்சர் கார்டெக்ஸ்(Somatosensary Cortex) முலைக்கு கிச்சு கிச்சு மூட்டலைத் தெரிவிக்கிறது.
• கடல் அலைகளின் தோற்றத்தில் மேகங்கள் உருவாகாது: இது சரியல்ல. உருவாகும் என்பதே சரி. குன்று, குதிரை, சிங்கம், குழந்தை விளையாடுவது போன்ற வடிவங்களை மேகங்களில் சிலர் பார்த்திருக்கலாம். கடல் அலைகளைப் போல பார்ப்பது அரிது. ஆனால் இப்படி இருக்கும் மேகங்களை அமெரிக்காவில் சிலர் பார்த்திருக்கிறார்கள். 2019ம் ஆண்டு வர்ஜீனியாவில் உள்ள மக்கள் ஸ்மித் மலையின் மேலே, கடல் அலைகளைப் போன்ற மேகங்களைப் பார்த்தனர். இதற்கு கெல்வின் ஹெல்ம் க்ளௌட்ஸ்(Kelvin – HelmholzClouds) என்று பெய. மேகங்களின் மேற்புறத்தில் வேகமான காற்றும், கீழ்புறத்தில் மெதுவான காற்றும் வீசுவதே இப்படிப்பட்ட கடல் அலை மேகங்களுருவாகக் காரணம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
*************************************
Feb 252022