`குருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2021-22 சிம்ம ராசி:
சிம்ம ராசி:
வருகிற நவம்பர் மாதம் 21-ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். ரிஷபத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய ராசியையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும். சனி பகவான் இப்போது அஷ்டம சனியாக, உங்கள் 8 -ம் இடத்தில் , சஞ்சரித்து , உங்களுக்கு சோதனைகளைக் கொடுத்தாலும்கூட குருபகவானால், சனி பகவானுடைய தீய பலன்கள் கட்டுப்பட்டு கெடுபலன்களை ஏற்படுத்தாது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
குருவின் இந்த சஞ்சாரத்தின்போது உங்களுக்கு ‘குருபலம்’ ஏற்படும். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.
குருவின் சுபப் பார்வைகளால் சில நன்மைகள் நிகழவும் வாய்ப்புண்டு. மூன்று சுபப் பார்வைகளில் ஒரு பார்வை உங்கள் ராசியின்மீது விழுவதால், உங்கள் உடல்நலமும் தெம்பும் தன்னம்பிக்கையும் கூடும். முயற்சியும் முன்னேற்றமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் தகுதிக்கேற்ப மதிப்பும் மரியாதைகளும் கூடும். வெற்றி வாய்ப்புகள் சந்தோஷமான அனுபவங்கள் ஏற்படும். அடுத்த சுபப் பார்வையானது உங்கள் வீரதீர பராக்கிரம ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் உங்கள் மனதில் தைரியமும் எதையும் தாம்கும் வலிமையும் உண்டாகும். உங்கள் சகோதரர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவதோடு உங்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். அடுத்த சுபப் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தின்மீது பதிவதால், அடிப்படை வருமானம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், உபரி வருமானமும் கிடைக்கும்.
குருவின் வக்கிர நிலை:
. அப்போது உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையலாம்.சில ரகசிய நோய்கள் தாக்கக்கூடும். சரியாக சாப்பிடாமலும், வேலை மும்முரத்தில் வேளைக்கு சாப்பிட முடியாமல் போவதாலும் ஆரோக்கியம் பாதிப்படையும். மற்ற கவலைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகமாக்கும். உங்கள் உடன் பணியாற்றுபவர்களிடமிருந்து மதிப்பு, மரியாதையை எதிர்பர்க்க முடியாது. பொதுவாக குரு 6-மிடத்தில் வக்கிர சஞ்சாரம் செய்யும்போது ஆரோக்கியத்தில் கவனம் தெவை. மற்றும், ஏனையோரிடம் நல்ல உறவை மேம்படுத்திக்கொள்வதும் அவசியம். பொது சேவையில் ஈடுபடுவீர்கள். திரும்ப பலனை எதிர்பார்க்காமல், பொதுப்பணியாற்றுவது நன்மையளிக்கும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று பகவானைத் தரிசித்து வரவும்.சனிக்கிழமைகளில் சனி பகவானை எள்தீபம் ஏற்றி வழிபட்டால், துன்பம் விலகும்.
வாழ்க வளமுடன்!
###################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^