Nov 022021
 

குரு பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2021-22–தனுசு ராசி :

தனுசு:

. வருகிற நவம்பர் மாதம் 21-ம் தேதியன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த சஞ்சாரம் கோச்சாரப்படி சரியில்லை யென்றாலும்கூட குரு பகவான் தனது புனிதமான பார்வைகளால் உங்களுக்கு சில நன்மைகளைச் செய்யத் தவற மாட்டார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தை தனது 5-ம் பார்வையாலும், 9-ம் இடத்தை 7-ம் பார்வையாலும், 11-ம் இடத்தை தனது 9-ம் பார்வையாலும் பார்த்து அந்த இடங்களை மேன்மையடையச் செய்கிறார்.
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் விழும் குருபார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணைப் இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறக்கும். தொழிலுக்கு நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலருக்குப் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு சில உதவிகள் கிடைக்கும். சிலருக்கு மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிலர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாலும்கூட சிலருக்கு திடீர் என்று பண வரவுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் விழும் குரு பார்வையால், உங்கள் தந்தை மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். புதிய ஆடைகள் வாங்குவீர்கள். வெளியிடங்களில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் வீட்டில் அது கிடைக்காமல் போகும். குரு பகவான் தன்னுடைய புனிதமான 9-ம் பார்வையால், உங்களுடைய 11-ம் இடத்தைப் பார்வதால், இதன் பலனாக நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால் அவை அனைத்தும் அவசிய காரியங்களுக்கு பயன்படாமல், விரயமாகும். சிலருக்கு மனைவழிப் பூர்வீகச் சொத்தின்மூலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.உங்கள் தந்தையும் தந்தை வழி உறவினர்களும் கை கொடுக்க தயங்க மாட்டார்கள். இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களைப் பார்க்கலாம்.
எடுக்கும் முயற்சிகள் , செயல்கள் அனைத்திலும் தடை உண்டாகும். வியாபாரம், தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் செய்தொழிலை விட்டுவிட்டு வெளியூர் செல்ல நேரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். சகோதரர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். இல்லையென்றால், பகை உண்டாகும். கல்வி தடைப்படும். எந்த முயற்சியிலும் தைரியத்துடன் இறங்க முடியாது. மன தைர்யம் குறைந்து எதையும் தள்ளிப் போடத் தோன்றும்.
யாரிடமும் கோபமாகப் பேசுவீர்கள். கோபத்தை மட்டுமே வெளிக் காட்டுவீர்கள். அதன்மூலம் எதிரிகள் தலைதூக்குவார்கள். எதிரிகளின் கை ஓங்கி நிற்கும். எதிரிகள் உங்கள் உறவினரிடையே சண்டை மூட்டிவிடுவார்கள். உங்கள் தொழிலில் போட்டியை வேண்டுமென்றே உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தைக் கெடுப்பார்கள்.
தேவையற்ற செலவுகள் தலை தூக்கும். எனவே தேவையற்ற செலவுகளில் நீங்கள் கவனம் செலுத்தும்போது, தேவையான செலவுகளை செய்யமுடியாமல் போகும் . அதனால், ஏற்படும் விளைவுகளை சமாளிக்க முடியாமல் போகும். மனதில் குழப்பமும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் இருக்கும். மனதில் மகிழ்ச்சியோ, அமைதியோ இருக்காது. ஆனால், ஒரு விஷயத்துக்கு நீங்கள் மகிழ்ச்சியடையலாம் . உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் பக்கமே இருந்து உங்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுப்பார். உங்கள் வேலை வாய்ப்புகள் தள்ளிப் போகும். குல தெய்வ வழிபாடுகளும் தடைப்படும்.
உங்கள் நகைகளை அடகு வைக்க நேரும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். வேண்டாத இடமாற்ற உத்தரவுகள் வரும். உங்கள் வியாபாரம் மந்தமாகும் . ஆரோக்கியம் சம்பந்தமாக பிரச்சினை எழும்பி, மருத்துவ செலவு உண்டாகும். பிள்ளைகளால் பிரச்சினை உண்டாகும் .அவர்களின் திருமண முயற்சிகள் கூடி வராது. அவர்களுடைய வேலை வாய்ப்புக்கான முயற்சிகளும் தள்ளிப் போகும். எனவே பிள்ளைகள் சம்பந்தப்பட்ட மனக் கவலைகள் மனதை ஆக்கிரமிக்கும். எல்லா பிரச்சினைகளும் தீர கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.
குருவின் வக்கிர சஞ்சாரம்
அப்போது, பொருளாதாரப் பிரச்சினைகள் எழும். உங்கள் சேமிப்பு, முதலீடுகள், உடமைகள் ஆகியவற்றில் நஷ்டம் உண்டாகும். இந்த சமயத்தில் பண விவகாரங்களை முடிந்தவரை ஒத்திப் போடுவது நல்லது.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தியை, மஞ்சள்நிற மாலையும், கொண்டக்கடலைமாலையும் அணிவித்து வழிபடுவது துயரம் தீர்க்க உதவும்.
வாழ்க வளமுடன்!
###################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)