குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023
மகரம்:
இந்த புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களைப் பார்க்கலாம்.இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள், செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம் பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு ,கெடும். அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு பேசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும். இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்தும்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான சுபகாரியங்களும் தடைப்படும்.
பரிகாரங்கள்:
ஏற்கெனவே கூறப்பட்டுள்ள பொதுப் பரிகாரங்களோடு, கும்பகோணத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலுக்குச் சென்று உங்களின் பெயருக்கு அர்ச்சனை மற்றும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள மேற்கொண்டால், நன்மை பிறக்கும். காஞ்சிபுரத்தில் வரத்ராஜர் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கும் முறைப்படி அபிஷேக ஆராதனைகள் மேற்கோண்டால் மற்றும் தங்களின் பெயருக்கு அர்ச்சனை போன்றவற்றை அனுசரித்தால் நன்மை பெறலாம். நீலம், வெள்ளை, மற்றும் பச்சை முதலிய நிறங்கள் நன்மை சேர்க்கும். கருப்பு, சிகப்பு மற்றும் சாம்பல் நிறத்தை தவிர்ப்பது நல்லது கிழக்கு, மேற்கு, தென்மேற்கு மற்றும் வடக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது. சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றவும் வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சிக்கவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்து வழிபடவும். குருவின் சஞ்சாரம் சரியில்லாததால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்தியை வழிபடவும்.
^^^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^