Apr 142022
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023

கும்ப ராசி:

இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான்   உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். .இனி பலன்களைப் பார்க்கலாம்.
குருவின் 2-மிட சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வர்த்தகம் மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் வேற்று இன மத மக்கள் அந்நிய மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவியாகவும் நட்பாகவும் இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம் நூதனமான பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் மேன்மையான நிலையினை அடைவார்கள். ஏற்றுமதி –இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தற்போது ஏற்ற காலமாகும். இந்த காலத்தில் இவர்கள் ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிலர் ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளுதல் போன்ற வாய்ப்பினைப் பெருவார்கள். பூர்வீகச் சொத்து மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள்.
அரசாங்கம் ,அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளால் உதவி ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட இப்போது உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட உங்களை எதிர்கொள்ளத் துணிய மாட்டார்கள். . அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள்.
கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலர் ரிப்பேர் செலவு கொடுத்துவந்த வன்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்குவார்கள். புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளி, வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும்.மாற்று மத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.
உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடைவார்கள். புத்திர- புத்திரிகள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். கல்வி, வங்கி,பத்திரிக்கை, எழுத்துத்துறை,ஆசிரியர் பணியில் உள்ளோர் மேன்மை அடைவார்கள். உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் பல செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்புகளும் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வாங்குவீர்கள்.
உங்களுக்கு அதிகாரமான பதவி ஒன்று கிடைக்கும். உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும்.
சிலர் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி அதன்மூலம் நல்ல புகழை அடைவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேண்டியதையெல்லாம் வாங்கித் தருவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்கள்மீது அன்பைப் பொழிவார்கள்.
கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம் தொல்லை வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல் உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம் மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக மாறி உங்களை மேம்பட வைக்கும்.பிரிந்த நண்பர்கள் திரும்ப வந்து சேருவார்கள்.
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். விரும்பிய புகழ், அந்தஸ்து கௌரவப் பதவிகள் முதலியவை அவர்களைத் தேடி வரும். மாணவர்களுக்கும் இது யோகமான காலம் என்றே கூறவேண்டும். படிப்பில் ஜொலிக்கும் காலம் இது.தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கேம்பஸ் செலக்ஷனில் தேர்வு பெற்று நல்லதொரு பணியில் அமர்வீர்கள்.
பத்திரிக்கைத் துறையில் உள்ளவர்களுக்கும் கலைஞர்களுக்கும் இது யோகமான காலம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பலராலும் போற்றப்படுவார்கள். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். களவு போன பொருட்கள் திரும்ப கைக்கு வரும். போலீஸ் உதவியுடன் திரும்ப வந்து சேரும். வேளீநாட்டு வேலையும் படித்த படிப்புக்குத் தகுந்தவண்ணம் கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலோ, அல்லது வெளியூரிலோ இருந்தால், விரும்பிய வண்ணம் இடமாற்றமும் தொழில் மாற்றமும் கிடைத்து, குடும்பத்துடன் இணைவீர்கள்.
கடன் தொல்லை தீரும். கையிருப்பு கூடும். நீங்கள் செய்யும் செயல்கள் முழு வெற்றியைத் தரும். தொழில் ரீதியான செலவுகள் வரும். தொழிலினால் கடன் வராது. புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். பிரச்சினைகள் கோபதாபங்கள் அனைத்தும் அறவே விலகுவதால்,அன்பும் அன்னியோன்யமும் பெருகும். தன வரவுகள் அதிகமாகும். பிள்ளைகளுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து ஒன்று சேரும். இப்படியாக மிக நல்ல பலன்களாக நடக்கும் யோகமான காலம் இது.
ராகு பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும்.எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள்.
செய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்
மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும். சகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்க்கை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். அலுவலக வேலை காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.

பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். சனியின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்றுஎள்தீபம் ஏற்றவும்.துயரங்கள் விலகும்.
இந்தப் புத்தான்டு இனிய ஆண்டாக மலரட்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டுக்குத் தொடர்புகொள்ளவும்]
*******************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)