சனிப் பெயர்ச்சி பலன்கள்- 2023-2025
மேஷ ராசி
கர்மாதிபதி என அழைக்கப்படக்கூடிய சனி பகவான், நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் 2023 ஜனவரி 17ம் தேதி செவ்வாய் கிழமை அன்று சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு முறைப்படி பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனி பகவான் மேஷ ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது சுப பலன்களைத் தரவல்லது.
சனியின் இந்த சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். சனி உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது லாபகரமானது என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த விரோதம் விலகும்.
குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள் .பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு குடும்பத்தில். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும். திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்..
பரிகாரம்:
ஸனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
*****************