Dec 142022
 

சனிப் பெயர்ச்சி பலன்கள்:2023-2025

மீன ராசி


சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் சிலருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்
இந்தஆண்டு சனி பகவான் ஏழரைச் சனியாக சஞ்சரிப்பதால், இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.
வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம்.
மான பங்கம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்
பெண்களுக்கு: உடல் மற்றும் மனம் ரீதியான பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். தேவையற்ற மனக் குழப்பம் போன்றவை வாட்டும். உங்கள் மனதைரியத்தை அசைத்துப் பார்க்கும். அதற்கு இடமளிக்காமல் தனித்து நின்று உங்கள் பயணத்தை தொடருங்கள். அப்போதுதான் சனியின் பாதிப்பு உங்களை அதிகம் வாட்டாது.
மாணவர்களுக்கு:சிற்சில சங்கடங்களையும் தடைகளையும் கல்வி அடிப்படையில் ஏற்படுத்தும். உடல்நலக் கோளாறு, அல்லது ஞாபக மறதி மற்றும் கல்வியில் ஆர்வமின்மை போன்றவை வழக்கம் போல ஏற்படவே செய்யும். நீங்கள் உங்கள் பங்கிற்கு அலுப்புடனும் உற்சாகமற்றும் கல்வியில் ஈடுபடுவதால், வெற்றி கனவாகி விடும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டாமல் போகும்.
புதிதாக வரும் நபர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையேல் அவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகககூடும். அதேபோல் தற்போதைய குருவின் கடக ராசிப் பிரவேசமும் உங்களுக்கு சில சங்கடங்களையும் மனக் கவலையையும் ஏற்படுத்தும். மேலும் வெளிவட்டாரத்திலும் வீட்டிலும் உங்களுக்கு கெட்ட பெயர்கள் வர இந்த காலக் கட்டத்தில் வாய்ப்புள்ளது.
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லை யாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்யவும். கௌப்பு ஆடைகளை தானம் செய்யவும்.
*************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)