சனிப் பெயர்ச்சி பலன்கள்:2023-2025
கும்ப ராசி:
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் சிலருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்
சனி தற்போது உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். இந்த சஞ்சாரம் ‘ஜென்ம சனி’ என்று கூறப்படும். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான்.
உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.
இவரே தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும்.
தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும்.
மாணவர்களுக்கு உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும். நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த் சனிப் பெயர்ச்சி பெரியாளவில் நமைகளைச் சேர்க்காது
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லை யாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்யவும். கௌப்பு ஆடைகளை தானம் செய்யவும்.
***************