Nov 142022
 

சப்போட்டா பழமும் அதன் பயன்களும்:

1. சப்போட்டா பழத்தை மிக்ஸியில் அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டு வர, வயிறு சம்பத்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
2. சப்போட்டா, வழைப் பழம், மாம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, தேன் கலந்து சாப்பிட உடலுக்கு வலிமையையும் , உறுதியையும் தரும்.
3. சப்போட்டா பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குடல் புண், குடல் எரிச்சல், வயிற்ரு வலி, வயிற்றெரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.
4. சப்போட்டா பழத்தை தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்து ஜூஸாக அருந்த உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
5. இப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.
6. பித்தத்தைப் போக்கும் சப்போட்டா பழக்கூழ் கோடையில் ஏற்படும் தாகத்தைத் தணிக்கும். கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கையான மருந்தாகும்.
7. சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்துப் பொருட்களும் விட்டமின்களும், ரத்த நாளங்களை சீராக வைக்கும் குணம் கொண்டவை இவை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
*******************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)