• சிம்பன்ஸிக்களும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது.:
உண்மையல்ல. 2019ம் ஆண்டு லோங்கோ தேசியப் பூங்காவில் (Laon National Park) vazntha 18 சிம்பன்சிகள் திடீரென 5 கொரில்லாக்களைத் தாக்கின. 75 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், பெரிய கொரில்லாக்க தப்பித்துக்கொள்ள 2 கொரில்லாக் குட்டிகள் கொல்லப்பட்டன. அதே ஆண்டில் ஆஸ்னாப்ரூக் பல்கலைக் கழகம் மற்றும் மேக்ஸ் ப்ளங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வில், உணவுக்கான போட்டியே தாக்குதலுக்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
• பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு:
உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன .கூடுதலாக அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால் அது அவற்றுக்கு கூடுதல் சுமைதான். எனவே பெர்ம்பாலான் அபறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. பறவைகளின் உடல் நிறமும் அவை எழுப்பும் ஒலியும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அலகுகளும் கால்களிலுள்ள விரல் நகங்களும், சண்டையிடும்போது உதவுகின்றன.
***************************************
Jul 012022