May 052022
 

சில பயனுள்ள குறிப்புகள்:


1. கல் வைத்த கம்மலில் எண்ணெய் இறங்கிவிட்டால், அதை வெள்ளைத் துணியில் குப்புற வைத்து இட்லிப் பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ஆவியில் வைத்தால் கம்மலில் இருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.
2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால், ஏதேனும் பற்பசையைத் தடவி, பிரஷால் தேய்த்தால் அழுக்கு நீங்கி புதிது போல மின்னும்.
3. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை வெந்நீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக் குளிர்ந்த நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து மேல் டம்ளரைத் இழுத்தால், எளிதாக வந்துவிடும்.
4. தூபக் காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு, அதன் மீது கிராம்புத் தூளைத் தூவவும். அந்தப் புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.
5. ஃப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபுள் பிரியாணி செய்யும்போது வேகவைத்த கார்ன் முத்துக்களை சேர்த்து செய்து பாருங்கள். முத்து முத்தாக அழகாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். ஜீரகம் மற்றும் மிளகு நெய்யில் வறுத்து பொடி செய்து, நான்கு அல்லது ஐந்து சிறிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கி, உப்பு கலந்து சாதத்தைப் பிசைந்து வையுங்கள். ‘ஜீரா ரைஸ்’ தயார்.
6. கால் கிலோ உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து நீரை வடித்து தோலை உரித்து மசிக்கவும். அத்துடன் மிக்ஸியில் அரைத்தெடுத்த தக்காளி ஜூஸ் இரண்டு கப் சேர்த்து கெட்டியாகும்வரை கொதிக்க விடவும். தேவையான கொத்தமல்லி இலை, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சப்பாத்தி, பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
*************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)