சோளம் –தரும் ஆரோக்கியம்:
சோளத்தில் வெண் சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம் பழுப்பு நிறச் சோளம், என பல ரகங்கள் உண்டு.
அரிசியைவிட பல மடங்கு சத்துகளைக் கொண்டுள்ளது. உடலுக்குத் தேவையான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார், மாவு, கரோடின், தயமின், ரிபோஃப்ளேவின் நயசின், மெக்னீஷியம், பாஸ்பரஸ் பொட்டாஷியம் சோடியம், அஸ்காம்பிக் அமிலம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது. மக்காச்சோளம்தான் பலருக்குத் தெரிந்த உணவுப் பொருள். நம் நாட்டில் விளையும் வெள்ளைச் சோளம் பற்றி பலருக்குத் தெரியாது. வெள்ளைச் சோளம்
• இதய ஆரோக்கியத்தைப் பேணும்.
• அதிகப்படியாக உள்ள நார்ச் சத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
• ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அகற்றி, மாரடைப்பு வராமல் தடுக்கும்.
• எலும்புகளை பலப்படுத்தும்.
• வயது முதிர்வால் வரும் மூட்டுவலி, எலும்பு தேய்மானத்தை நீக்கும்.
• ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வெள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும். உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும்.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலில் வியர்வை அதிகம் தங்கி, தோல் பாதிப்புக்கு உள்ளாவதால் ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்படும். இதனால் தோலில் அரிப்பு மற்றும் தோல் உரிந்து சிவப்பு நிறமாகக் காணப்படும்.
வெள்ளை சோளத்தை தினமும் உணவாக்கினால், இது போன்ற பாதிப்புகளைத் தடுக்கலாம். இதில் போதுமாண அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இதனால் வயிற்றுவலி, உடல் சோர்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
காலை உணவாக அடிக்கடி வெள்ளை சோளத்தை உண்டு நலமுடன் வாழ்வோம்.
************************************
Apr 012022