ஜீன்ஸ் பாண்டில் உள்ள சிறிய பாக்கெட் ஸ்டைலுக்கானது:
உண்மையல்ல; 1879ம் ஆண்டு லெவி ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பாண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அந்தக் காலத்தில் ஆண்கள் தங்கள் பாக்கெட் கடிகாரங்களை ஜீன்ஸில் வைத்துக் கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி, பயணச் சீட்டு, நாணயங்களை வத்துக்கொள்ளலாம் என்றாகிவிட்டது
‘ரன்னிங் அமோக்’ (RUNNING AMOK)என்பது மன நலக் குறைபாடு:
உண்மை. மலாய் வார்த்தையான ‘மெங் அமுக்’ ( Meng Amok) என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற் அவார்த்த உருவானது. சமூகத்தைப் புறக்கணித்த மனிதர் , பெருந்திரளான அல்லது தனி நபர்களைத் தீவிரமாகத் தாக்கும். குறைபடு உள்ளவர் என்று ‘ரன்னிங் அமோக்கை’ வரையறை செய்யலாம்.1770ம் ஆண்டு கடற்பயணம் செய்த கேப்டன் குக் என்பவர் , மலேஷிய பழங்குடியினரிடையே ‘ரன்னிங் அமோக்’ ‘ மனநலக் குறைபாடு ‘இருப்பதைப் பதிவு செய்துள்ளார்.
**********************
Jun 282022