Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்- சுபகிருது வருஷம்-2022-2023:

மேஷம்:


தற்போது குருபகவான் உங்களுக்கு  விரய ஸ்தானமான 12-ம் இடத்துக்குப் போவதால், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.சனி பகவான் 10-மிடத்திலும் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

இந்த புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல் முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும். பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி, வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி ,அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும். மனதில் நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
குருவின் 12-மிட சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும் சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் கல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்.
இந்த வருடம் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்த சமயத்தில், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
உங்கள் பதவி, உத்தியோகத்திற்கு பங்கம் வரும். வேண்டாத இட மாற்றம் ஏற்படும். செய்வினை, பில்லி சூனியம் போன்ற பாதிப்புகளின் அச்சம் ஏறப்டும். மனப் பயம் கூடும். கவலை மிகும். கருமித்தனம் மேலிடும். காசி, ராமேஸ்வரம் என்று தல யாத்திரை செல்வீர்கள். அதாவது அதிக காலம் வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வர். அதிக உழைப்பும் ,குறைந்த வருவாயும் உள்ள வேலைகளில் ஈடுபட்டு கஷ்ட ஜீவனம் பண்ணுவர். பலனற்ற வேலைகளில் ஈடுபடுவர். வீண் அலைச்சல் மிகும். தன நஷ்டமும் கலவிக்குப் பங்கமும் ஏற்படும். தோல்வி பயம் ஏற்படும். பலவித நோய்கள் பற்றிக் கொள்ளும். அவச்சொல், பெரும் பழி, எல்லாம் அடிக்கடி வரும்.
இவருக்கு இதய ரோகம் ஏற்படும். மான பங்கம், கௌரவ பங்கம் ஏற்படும். ஓயாத உழைப்பும், அதைச் செய்ய முடியாத களைப்பும் ஏற்படும். வேலைக்குக் குறைந்த பலன்தான் ஏற்படும். புத்தித் தெளிவு சிறிதும் இராது. நிர்ணயத் திறன் குறையும். லாபமில்லாத ஆதாயமில்லாத வேலைகளைச் செய்வர். இபப்டி பல வகையிலும் கஷ்டமே ஏற்படும். சனி, எல்லா விதத்திலும், 10-ம் இடத்தில் அசுப பலனையே தருகிறார்.
திருமணமான பெண்கள் மிகவும் சிரத்தையோடு செயல்படுவது நல்லது. கணவரிடமோ அல்லது அவரது உறவினரிடமோ அதிக வாக்குவாதத்தை அல்லது பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. புகுந்த வீட்டில் வசிக்கும்போது உங்கள் மாமியார், மாமனார் அல்லது நாத்தனார் போன்றோருடன் காரசாரமான சண்டைக்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அல்லது காட்டாமல் விட்டுக்கொடுத்துப்போகும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், அதனால் பின்னால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலம். கெட்ட பெயரும் தலைகாட்டாது.
மாணவர்கள் வீட்டு சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு, கல்வியில் போதிய ஆர்வத்தை குறைத்துக்கொள்ள இந்த நேரமானது அமைகிறது. பெற்றோர்களும் உறவினர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளும் விதமாக உங்கள் நிலையானது மாறலாம்.
அரசியல்வாதிகளுக்கு சனியின் 10-மிட சஞ்சாரம் முடியும்வரை உங்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக உங்களின் கீழ் உள்ளவர்களின் செயல்கள் தலை விரித்தாடும். மேலும் உங்களிடம் நெருங்கிப் பழகும் உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தாங்கியே தீர வேண்டும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை இழக்க நேரலாம்.

இந்த வருடம் நிகழும் ராகு –கேது பெயர்ச்சியில் ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அப்போது ராகு உங்கள் ராசியிலும், கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள்..
இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும்.
பரிகாரம்:
பொதுவான பரிகாரங்களோடு, உள்ளூரில் உள்ள நவக் கிரகத்தை வழிபடலாம். சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வணங்க்வும். நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்ல்து பச்சை நன்மை தரும். வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு உகந்த திசைகளாகும். ஆண்டின் பிற்பகுதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லயாதலால், வியாழக் கிழமைகளில் த்ட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை சாத்தவும். வெள்ளிக் கிழமைகளில் துர்கைக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும்.

[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)