Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன் சுபகிருது வருஷம் 2022-2023:.

மகரம்:

இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 4-ம் இடத்திலும் கேது உங்கள் 10-ம் இடத்திலும் சனி உங்கள் ராசியிலும், குரு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களைப் பார்க்கலாம்.இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள், செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம் பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு ,கெடும். அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.
பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு பேசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.
எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும். இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்தும்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான சுபகாரியங்களும் தடைப்படும்.
சனி தற்போது உங்கள் ராசிக்கு ஜென்ம சனியாக சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். இந்த சஞ்சாரம் ‘ஜென்ம சனி’ என்று கூறப்படும். சனி ஜென்ம சனியாகப் பிரவேசிக்கும்போது எல்லாவற்றையும் விட அதிகமாகக் கொடிய பலனைத் தருகின்றான்.
உயிருக்குக் கண்டம், நோய்கள், பிறருடன் விரோதம், தன விரயம் , சிறைப் பயம், மான கௌரவ பங்கம் மாரக பயம் எல்லாம் உண்டாகும். தலை நோய், வைசூரி, பேதி போன்றவை தோன்றும். ஜல கண்டம் ஏற்படும். பித்த வாத நோய்கள் ஏற்படும். யாருக்காவது இவர் கர்மம் செய்ய வேண்டியது வரும். உணவின் நச்சுத் தன்மையால் தீரா நோய் ஏற்படும். தீ விபத்துகள் ஏற்படும்.
இவரே தம் உறவினர் ஒருவர் மரணத்துக்குக் காரணம் ஆகிறார். உடல் ஒளி கெட்டு தோற்றப் பொலிவு அழிகிறது. உடல் கருத்துத் தோன்றும். உறவினர்களும் நண்பர்களும் பிரிவர்.குழந்தைகளுக்கு நோய் காணும். வீண் அலைச்சல் அதிகமாகும். சிறைப் பயம் அல்லது சிறைவாசம் உண்டாகும்.
தொங்கிய முகத்துடன் பிறரிடம் சென்று கையேந்தி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பர். கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்படும் ஆபத்தும் உண்டு. மனக் கிலேசமும் , உடலில் அளவுக்கு மீறிய உழைப்பால் சோர்வு முதலியவையும் உண்டாகும்.
மாணவர்களுக்கு உற்சாகமின்மையையும் ஏற்படுத்துவார். மேலும் குடும்பச் சூழலும் உங்கள் கவனத்தைப் பலவழிகளிலும் சிதறடிக்கும். நல்ல மதிப்பெண் பெறுவதோ அல்லது விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுப்பதோ அரிதாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி பெரிய அளவில் நன்மைகளைச் சேர்க்காது.
ராகு-கேதுவின் சஞ்சாரங்களும் நற்பலன்களை வழங்காது. மேலே கூறப்பட்ட கெடு பலன்களையே வழங்கும். ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இதற்குண்டான பலன்களைக் காணலாம்.
இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சில சோதனையான பலன்களே நடக்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்களாலும், கால்நடைகளாலும் நஷ்டம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். நீங்கள் கட்டும் கட்டடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது எதிரிகளின் தொல்லைகளாலோ பாதியில் நின்று போகும். சிலர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.. சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போவார்கள். வியாபாரம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளநேரும். பயணங்கள் வெறும் அலைச்சலிலும் சுகவீனத்திலும் முடியும். வேறு பயன் இருக்காது.
சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்த வேலையிலிருந்து ஊர் ஊராகச் சுற்றி அலையும் வேலைக்கு மாற்றம் வரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். விஷக்கடி ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். கடும் முயற்சி செய்தால் மட்டுமே, தேவையான மதிப்பெண் பெற்று, உயர் வகுப்பிலோ வேலைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ளவயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். முடிவெடுப்பதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கவேண்டும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படும். சக தொழிலாளர்களிடம் மேலதிகாரிகளிடம் உங்கள் மீது குறை கூறுவார்கள். சிலருக்கு விருமில்லாத இடத்துக்கு பணிமாற்றம் வரும். சிலர் அவர்கள் தகுதிக்குக் குறைந்த வேலையில் அமர்த்தப்படுவார்கள். தசா புத்தி சரியில்லாத சிலருக்கு வீட்டில் திருட்டுப் போகும்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு. சிலர் பொதுப் பணியாற்றி புகழ் பெறுவார்கள். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். அதேசமயம் தேவைக்காக புதிய கடன்கள் ஏறப்டவும் வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கிருக்கும் கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கும். ஆனால், அலர்ஜி, தோல்நோய்கள் போன்ற சிறிய நோயகளின் உபத்திரவம் இருக்கும். ராகுவின் 11- ம் பார்வை உங்கள் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு சரிந்து உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். முக்கியத் தேவைக்கு வருமானம் இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். வார்த்தையில் சாதுர்யம் இல்லாமல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள்அதிகமாகும்.
எதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி சுமுகமாக இருக்கும்.
இனி கேதுவின் சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். தொழிலில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அதனால் கையில் பணப்புழக்கம் குறையும். கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அதுபோல் அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு விருப்ப ஓய்வில் சென்று விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பண விஷயத்தில் நாணயம் தவறி அவமானப்படக்கூடும். சிலர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்குள்ளாவார்கள். சிலர் வீண் ஜம்பத்தை விட முடியாமல் தேவையற்ற கஷ்டங்களைத் தானே தேடிக்கொள்வார்கள். ராகுவின் 11-ம் பார்வை உங்கள் 8-மிடத்தில் பதிவதால், கோர்ட் கேஸ்கள், வீண் வம்பு வழக்குகள் தேடி வரும். தொலலைகள் வந்து சேரும்.
பொதுவாக கேதுவின் 10-ம் இடத்து சஞ்சாரம், எதிர்காலச் சிறப்புக்காக இப்போது அடித்தளம் அமைத்துக்கொடுக்கும். ஞானிகள் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
பரிகாரங்கள்:
ஏற்கெனவே கூறப்பட்டுள்ள பொதுப் பரிகாரங்களோடு, கும்பகோணத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலுக்குச் சென்று உங்களின் பெயருக்கு அர்ச்சனை மற்றும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள மேற்கொண்டால், நன்மை பிறக்கும். காஞ்சிபுரத்தில் வரத்ராஜர் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கும் முறைப்படி அபிஷேக ஆராதனைகள் மேற்கோண்டால் மற்றும் தங்களின் பெயருக்கு அர்ச்சனை போன்றவற்றை அனுசரித்தால் நன்மை பெறலாம். நீலம், வெள்ளை, மற்றும் பச்சை முதலிய நிறங்கள் நன்மை சேர்க்கும். கருப்பு, சிகப்பு மற்றும் சாம்பல் நிறத்தை தவிர்ப்பது நல்லது கிழக்கு, மேற்கு, தென்மேற்கு மற்றும் வடக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது. சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள் தீபம் ஏற்றவும் வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சிக்கவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்து வழிபடவும். குருவின் சஞ்சாரம் சரியில்லாததால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்தியை வழிபடவும்.
^^^^^^^^^^^^^^
[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)