Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்-சுபகிருது வருஷம் 2022-2023:

தனுசு:


சித்திரை 1 ஏப்ரல் 14ம் தேதியன்று மேஷ லக்கினம், திரியோதசி திதி, பூரம் நட்சத்திரம், வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது.
இந்தப் புத்தாண்டில், உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் கலந்திருக்கும். நற்பலன்களைவிட தீய பலன்களே மிகுந்து காணப்படுவதால், எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் கோச்சாரப்படி சரியில்லை
சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சாரம் செய்வது ஏழரைச் சனியின் கடைசி பாதமாகும் இந்த சஞ்சாரம் அவ்வள்வு சிறப்பானது இல்லை. ராகு உங்கள் ராசிக்கு 5-மிடத்திலும் கேது 11-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
4-ம் இடத்துக்குச் செல்லும் குரு நன்மைகளை வழங்காது.
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும்.
புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு
இந்த அசந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.
குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும்.அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது. உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்த ஆண்டு, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.
கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.

பரிகாரம்:
குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும்.சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்யவும்.
.
வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்]
. .

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)