Apr 122022
 

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் சுபகிருது வருஷம் 2022-2023 :

விருச்சிகம்:

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 5-மிட சஞ்சாரம் செய்கிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 6 மற்றும் 12-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த ஆண்டில், குரு பகவான் 5-மிட சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள் மற்றும் சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக
ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.
எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கக்கூடும்.
[இந்த புத்தாண்டு பலன்கள் ‘ moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது]
அனைத்து கஷ்டங்களையும் சீர் செய்யும் வகையில் சனியின் 3-மிடத்து சஞ்சாரம் யோகமான பலன்களை வாரி வழங்கி வருகிறது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் மதிப்பு கூடும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மொத்தத்தில் சனியின் 3-மிட சஞ்சாரம் யோகமானதாகும்.
பரிகாரம்:
புத்தாண்டில் அனைத்து வித யோக பலன்களும் கிடைக்கும்.
.வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.
****************************
. .

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)