Apr 122022
 

தமிழ் புத்தாண்டு பலன்கள்: சுபகிருது வருஷம்-2022-2023

சிம்மம்:


இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ‘அஷ்டம குரு’வாக சஞ்சரிக்கிறார். சனி உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கிறார். ராகு 9-லும் கேது 3-லும் சஞ்சரிக்கிறார்கள்.
அஷ்டம குருவின் பலன்களைப் பார்த்தோமானால், அசுப பலன்களாகவே நிகழும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அஷ்டம குரு, முதலில் உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com [
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வடயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் போய், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர் அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல், தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.
. உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இல்லையென்றாலும், அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொள்வது அவசியம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இந்த கிரக சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். உங்களுக்கு பல வகையிலும் நன்மை செய்யும். பல வழிகளிலும் பணம் சேரும். நோய்கள் நீங்கி தேக பலமும் புதுப் பொலிவும் ஏற்படும். புதுத் தெம்பும் உற்சாகமும் கூடும். உயர்ந்த அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கௌரவமும் அந்தஸ்தும் ஏற்படும். கட்டளை இடும் பெரும் பதவிகள் வந்தடையும். பெரிய மனிதர் என்று பெயரெடுப்பர். இல்லற வாழ்வில் பெரும் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும். தவறான உறவுகளிலும் சிலர் மனம் செல்லலாம். ஆனால் எதிலும் வெற்றியே உண்டாகும்.அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் உண்டாகும். மாற்றான் பணமும் வந்து சேரும். பல நண்பர்கள் கிடைப்பார்கள். உதவுவார்கள். எல்லாக் காரியங்களாலும் லாபம் உண்டாகும். வீட்டில் தேவையான அனைத்து உணவுப் பொருட்கள்,மற்றும் வசதியான வாழ்க்கைத் தேவைகள் நிரம்பி வழியும். சந்தோஷ வாழ்க்கையே இருக்கும். எல்லா வகையிலும் சனி 6–ல் நல்லதையே செய்வார்.
குடும்ப ஒற்றுமை ஓங்குவதோடு, உங்களின் சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவது உறுதி. புகுந்த வீட்டிற்கு நீங்கள் செய்யும் உதவிகள் சிறியதே ஆயினும் உங்களை மிகவும் புகழ்ந்து தள்ளுவார்கள். கணவரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார். உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பளித்து மறுப்பேதும் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார். அதாவது அனைவரும் உங்களையே முந்நிறுத்தி கௌரவிப்பர். இந்த வகையில் உங்களின் செயலுக்கு பாராட்டுகள் குவியும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்தடையும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத சிலருக்கு தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். சிலருக்கு மூத்த சகோதர சகோதரிகளின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். அதன்மூலம் நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் அல்லது மறுமணம் நடக்கும் யோகம் உண்டு.. மாணவர்கள் சிறிதளவே நீங்கள் சிரமப்பட்டு படித்தாலும், அது பன்மடங்காக பலன் தர சனியின் சஞ்சாரம் துணைபுரியும். நீங்கள் விரும்பும் அல்லது உங்கள் தகுதிக்கேற்ற விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க ஏற்ற காலம் இதுவே ஆகும். மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி மூலையில் முடங்கிக் கிடந்த உங்களை உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிக் கொண்டு போகும்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில்சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.
பரிகாரம்:
குருவின் சஞ்சாரம் சரியில்லையாதலால் வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை கொண்டக் கடலை மாலாலை சாத்தி வழிபடவும். .
*********************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)