May 072022
 

துளசியின் மருத்துவ குணங்கள்:

துளசியில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டுதான் அதை தெய்வீகமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர், நம் முன்னோர். ராம துளசி, கிருஷ்ண துளசி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. துளசியில் நற்துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத் துளசி, கல் துளசி, நாய்த்துளசி, முள்துளசி என பலவகை உண்டு.
நற்துளசி: கபம், தாகம் மற்றும் சுவையின்மையைப் போக்கும். வயிற்று வலி குணமாகும். மந்தத்தை நீக்கும்.
நாய்த் துளசி: கபம், சளி, இருமல், ஜன்னி போன்றவற்றைப் போக்கவல்லது.
நிலத் துளசி: தாய்ப் பலால் குழந்தைகளுக்கு வரும் மந்தத்தைப் போக்கும். கனச்சூடு நீக்கும். கப ஜுரம், பித்த ஜுரம், குளிர் ஜுரத்தைப் போக்கவல்லது.
கல்துளசி: கட்டி, வண்டு கடி, பூச்சிக்கடி போக்கும்.
முள்துளசி: வெட்டுப் புண், கபம் போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.
செந்துளசி: விஷத்தை முறிக்கும். கபம் சைனஸை போக்கவல்லது.
கருந்துளசி: இருமல், இழைப்பு மற்றும் மார்புச் சளி குணமாகும். செருமல், வயிற்றுப் புழு நீங்கும்.
**************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)