Aug 262022
தேவையான பொருட்கள்;
தேங்காய்ப் பால்- 1 கப்; ட்னுவரம் பருப்பு வேக வைத்த நீர்- 2 கப்; தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்- தலா1; கடுகு, ஜீரகம், பூண்டு, மிளகு , தேங்காய் எண்ணெய்- சிறிதளவு; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை,[பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிப் போடவும். ஜீரகம் ,மிளகுப் பொடியுடன், நறுக்கிய தக்காளி சேர்க்கவும். நன்கு கொதித்ததும், தேங்காய்ப் பால் ஊற்றி இறக்கவும்.
சுவையான ‘தேங்காய்ப் பால் ரசம்’ ரெடி. சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
*********************