நம்மிடம் இருக்கும் மருந்து- அத்திப் பழம்
அத்திப் பழம் அதிக சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. புராணம் மற்றும் இலக்கியங்களில் அத்தியியைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பைபிளில் ‘ஆதி கனி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தி மரம் அதிகமாக எங்கும் வளர்க்கப்படுவதில்லை. அரிதாகக் காணப்படுகிறது. ஆனால் அத்தியையும் மற்ற மரங்களைப் போல் எங்கும் வளர்க்கலாம்.
அத்தி மரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி என கருதப்படுகிறது. ஈரம் உள்ள பகுதிகளில் நன்கு வளரும். சிற்றாறு மற்றும் காடுகளின் பள்ளத்தாக்கு பகுதிகளில் வளரும். அத்தி மரம் சுமர் 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும். அடி பாகத்திலும், மேல் பகத்திலும், கொத்து கொத்தாக காய்கள் பச்சை நிறத்துடனும், பழுத்ததும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும்.
அத்திக்கனி உண்ணத் தகுந்தது அல்ல; மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே என்று கருதப்படுகிறது. ஆனால் மற்ற பழங்கள் போல இதை தாராளமக உண்ணலாம். நன்கு பழுத்த் ஆத்திப் பழம் சுவையாக இருக்கும். அத்திக்காய் துவர்ப்பாக இருக்கும்.
பழத்தின் தோலை சீவி விட்டு உண்ணலம். உலர் பழத்தை தேனில் ஊறவைத்து உண்ணலாம். அல்லது உலர் பழத்திய பொடியாக்கி சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
அத்திப் ப்[அழத்தில் 13.6% நீர்ச் சத்தும், 7.4 % புரதச் சத்தும், 5.6 % மாவுப் பொருளும், 6.6 % சாம்ப்ல சத்தும், 0.91%பாஸ்பரிக் அமிலம், மெக்னீசியம், , பொட்டாஷியம், , இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற பல்வேறு உலோக சத்துக்களும் உள்ளன.
அத்தியில் அதிக அளவு சர்க்கரையும், குறைந்த் ஆளவு அமிலமும் உள்ள்து புதிய் அபழத்தில் அதிக சுண்ணாம்பு உள்ளது. பழம் உலர்ந்ததும் சுண்ணாம்பு சத்தின் அளவு குறைந்து விடும் .
அத்தி மரத்தின் இலை மற்றும் பட்டையிலும், பயன் உள்ளது. அத்திப் பட்டையில், டானின் வேதிப் பொருள் உள்ளது. இலைகள் கால் நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
அத்திப் பழத்தின் மருத்துவ் அபயங்கள்:
• aத்திப் பழத்தை அடிக்கடி உண்டு வர இதயம் பலமாகும்.
• ரத்தம் விருத்தியடையும். நோய் எதிர்ப்புத் திறன் கூடும். .
• அஜீரணத்தைக் குணப்படுத்தும்.
• அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால், ரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும். உலர் அத்தியைப் பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால், கல்லீரல் சீரடையும்.
• அத்தி விதைத் தூளை நீர் கலந்து சாப்பிட, நீரிழிவு நோய் குணமகும்.
• அத்திப் பாலுடன், வெண்ணெய், சர்க்கரை கலந்து 4 மணிக்கொரு முறை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால், சிறுநீரில் ரத்தம் கலந்து போவது நிற்கும். ரத்த பேதி சரியாகும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்..
• அத்திப் பட்டையைப் பிழிந்து சாறு எடுத்து, மோருடன் கலந்து அரை கப் வீதம் இருமுறை குடிக்க, பெரும்பலான வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
• பட்டைப் பொடியாக்கை, பாலில் கலந்து தேவையான அளவு சர்க்கரை கலந்து அருந்த. வாய்ப் புண், தொண்டைப் புண் குணமகும்.
• பட்டைஊற வைத்த நீரால், அவை விரைவில் காய்ந்துவிடும்.
***********************************************
Jun 162022