நெருப்புக்கரி:
நெருப்பில் உருவாகும் கரி உயிர் காக்கும் மாத்திரை முதல் ஐஸ்கிரீம் தயாரிப்பு வரை பயன்படுகிறது. ஆரோக்கியம், அழகு தரும் கரி குறித்து பார்ப்போம். உணவு சாப்பிட்டதும் சிறிய கரித் துண்டை வாயில் போடும் பழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள, ‘ரெட் கொலம்பர்’ என்ற குரங்குகளிடம் உள்ளது. சயனைட் போல் விஷத் தன்மை கொண்ட தாவர இலைகளையும் இவை உண்கின்றன. இவற்றை சாப்பிட்டபின் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்கவே கரித் துண்டை இவை தின்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தீயுடன் இணியந்தே பூமிக்கு வந்தது கரி என்பதை 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அறிந்தான். தீ எரிந்தபின் கிடைக்கும் கரிக் கட்டையின் பயனையும் புரிந்து கொண்டான். சமைத்த உணவை உண்ண கற்றுக்கொண்டான்.
கிரேக்க அறிஞர் ஹிப்போகிராட்டிஸ் கி.பி.4 ம் நூற்றாண்டில் கரியின் பயன்களைப் பற்றி ஆராய்ந்தார் விஷத் தன்மையை திருப்பி எடுக்க கரியால் முடியும் எனக் கண்டறிந்தார்.
கொடிய வெர்டிகோ , ஆந்திராக்ஸ் போன்ற கொடிய நோய்களைக் குணமாக்க கரி மருந்து பயன்படுத்தும் பழக்கமும் பண்டைய காலத்திலேயே இருந்தது. கயத்தில் உருவாகும் துர்நாற்றம் அகலவும் உடலில் விஷத்தன்மையை முறிக்கவும் மருத்துவ மனைகளில் இன்றும் கரி பயன்படுத்தப்படுகிறது.
********************