Aug 162022
 

நெல்லிக்காய்- தக்காளித் தொக்கு- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்-8; இஞ்சி-1 துண்டு; தக்காளி-5; காய்ந்த மிளகாய்-6; நல்லெண்ணெய்- 4 தேக்கரண்டி; கடுகு, உப்பு, வெல்லம்- சிறிதளவு; பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், மஞ்சள் தூள்- தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காய்களை கழுவி, சுத்தம் செய்து, விதை நீக்கி, துண்டுகளாக்கி லேசாக வதக்கவும். இதனுடன், நறுக்கிய தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் போட்டு வதக்கவும். ஆறியதும் நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து, வெந்தயம், மஞ்சள் தூள் , பெருங்காய்த் தூள் போட்டு, அரைத்த விழுதையும் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
சத்து மிக்க வெல்லிக்காய் தக்காளித் தொக்கு தயார். சாதத்துடன் பக்க உணவாக சேர்த்துக் கொள்ளலாம். ******************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)