Aug 122022
 

பல் பாதுகாப்பு:

பற்களை அலட்சியம் செய்தால், உடல் நலன் பாதிக்கப்படும். உணவை அரைத்து சாப்பிடவும், சொற்களை தெளிவாக உச்சரிக்கவும் இயலமல் போகும்.
பல் பாதுகாப்புக்கு கடைப்பிடிக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.
• உணவிற்கு முன் மற்றும் பின் வாய் கொப்பளிப்பது நல்லது.
• வேப்பன் குச்சியால், பல் துலக்கினால், உடலும் உள்ளமும் உறுதி பெறும். பார்வை தெளிவாகும்.
• புளிப்பு சுவையுள்ள உணவுகளை அளவோடு உண்டால், பற்கூச்சம் வராது.
• வாய் வழியாக சுவாசித்தால்,, பல் பழுதடையும்.
• சூடாகவோ அதிக குளிர்ச்சியாகவோ பானங்களை அருந்தினால், பற்களுக்கு சேதம் விளைவிக்கும்.
• வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடை வாய்ப் பற்கள், பின் கடைவாய்ப் பற்கள் என முளைத்திருந்தாலும் குறிப்பிட்ட வயதில் விவேகப் பற்கள் முளைக்கும்.
• பல் சொத்தை, ஈறு வீக்கத்தை ஆரம்பத்தில் கவனிப்பது அவசியம்.
• ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
• பற்கள் உறுதியாக, கீரை, காய்கறிகள் பால், முட்டையை உணவாக எடுக்க வேண்டும்.
• பற்களில் கரும்புள்ளி, ஈருகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், உடனே பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
*******************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)