May 012022
புடலங்காய் வடை- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
புடலங்காய்-1; துவரம் பருப்பு-100 கி; கடலை பருப்பு-100 கி; காய்ந்த மிளகாய்-4; மஞ்சள் தூள், சோம்பு, உப்பு; எண்ணெய். தண்ணீர்;
செய்முறை:
துவரம்பருப்பு மற்றும் கடலை பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, சோம்பு, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். புடலங்காயை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மஞ்சளில் புரட்டவும். அதை அரைத்த பருப்புடன் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும். சுவை மிக்க ‘புடலங்காய் வடை’ தயார்.
*******************************