பூர்வஜென்ம ஞாபகங்களை தொழில்நுட்பத்தால் வரவழைக்க முடியுமா?
பூர்வ ஜென்மம் என்பது வெறும் யூகம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலானவை மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமில்லை. நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிச் பல்கலைக் கழக ஆய்வாளர்மார்டன் பீட்டர்ஸ் நடத்திய ஆய்வில் முந்தைய பிறப்பு குறித்து தனக்கு நினைவு இருப்பதாகக் கூறியவர்களின் கூற்று போலியானவை என்று சொல்லப்பட்டுள்ளது. தங்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ள நினைவுகள் கற்பனையானவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆய்வின் முதல் நாள் அவர்களுக்கு அறிமுகம் இல்லாத சில நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வாசிக்கக் கொடுத்தனர். அடுத்த நாள் அனத்ப் பட்டியலில் கூடுதலாக பிரபல நடிகர் நடிகைகளின் பெயர்களை இணைத்துப் புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டது.
முதல் நாளில் பட்டியலில் பார்த்த பெயர்களை இரண்டாம் நாளில் சரியாஅக்க் கூற வேண்டும். இயல்பான நபர்களால் முதல் நாள் பட்டியலில் இருந்த எல்லா பெயர்களையும் முழுமையாக நினைவு கூற முடியவில்லை. புதிய பெயர்களை இனம் காண்பதும் அரிதாகத்தான் நடந்தது.
ஆனால், முந்தைய பிறவி ஞாபகம் இருப்பதாகக் கூறுபவர்கள், புதிய பெயர்களைச் சுட்டிக்காட்டி முதல் நாள் பட்டியலில் இவை இருந்தன என அடித்துப் பேசினார்கள்.
பூர்வ ஜென்ம நினைவு இருப்பதாகக் கூறுபவர்கள் அதுபற்றிய எண்ணங்கள் குறித்து, தவறான மனநிலை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்தியது.
**************************