மாசில்லாத விண்வெளிச் சுற்றுலா:
தொழிலதிபர் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜினெலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், ரிசர்ட் பிரான்சனின் வர்ஜின் காலாக்டிகாகிய மூன்று நிறுவனங்களும் முக்கியமான சாதனையைச் செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல; மக்களும்கூட சென்றுவர முடியும் என்பதை நிரூபித்துள்ளன. விண்வெளிக்கு சுற்றுலா செல்வது இனி முக்கியமான வணிகமாக மாற வாய்ப்புள்ளது.
“விண்வெளிச் சுற்றுலா காரணமாக, பருவச் சூழல் மாறுபடும். ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கிலுள்ள ஓசோன் அளவு குறையவும் வாய்ப்புள்ளது.” என்றார் நியூ சௌத்வேல்ஸ் பல்கலைக் கழக மூத்த பேராசிரியர் டாக்டர் ஸ்மித் இராவல்.
நான்கு அல்லது அத்ற்கு மேற்பட்டவர்கள் விண்வெளிக்கு செல்லும்போது அங்கு கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும் எனவும் சூழலியலாளர்கள் கருதுகின்றனர். விண்வெளிப் பயணத்திற்கு, வர்ஜின் நிறுவனம் செலவு குறைவான ஹைபிரிட் எஞ்சின்களை பயன்படுத்தியது. இதில் திட திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை நிறுவனத்திற்கு லாபம் தரும் என்றாலும் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
“விண்வெளிச் சுற்றுலா பிரபலமாக்கப்பட புவி வட்டப் பாதையில் ஸ்பேஸ்போர்ட்டுக்கான இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இப்பணி நடைபெற்றால், கார்பன் அளவு அதிகரிக்கும்.” என்கிறார் பின்லாந்து ஹாகா ஹெலியா பல்கலைக் கழக அறிவியல் துறைப் பேராசிரியர் அன்னெட்டெ டொய்வோனென்.
தற்போது வரை விண்வெளிப் பயணத்திற்கான மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. அவை உருவாக்கப்பட்டு, விண்வெளி நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கினால், சூழல் பாதிப்புகள் குறையும்.
************************