Feb 272023
 

முகம் பளபளப்பாக மஞ்சள் ஃபேஸ்பேக்:

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ்பேக் போட்டால் அதனை மணிக் கணக்கில் ஊற வைக்கக்கூடாது
மஞ்சள் பேக் செய்ய தேவையான வைகள்:
கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். . அவற்றில் ரசாயனம் இருப்பதால், அவற்ரை உபயோகித்தால், சருமத்திற்கு நல்லதல்ல. மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதேபோல் தேனையும் ஒரிகினலா என பரிசோதித்து உபயோகித்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள் பொடி- 3 ஸ்பூன் ; யோகார்ட்- 1 ஸ்பூன்; தேன் 1 ஸ்பூன்; தேங்காய் எண்ணெய்-1 ஸ்புன்
முதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து, நன்றாகக் கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் தேங்காயெண்ணெயை ஒன்றன் பின் ஒன்றாகக் கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக்க கலக்கவும். இப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களியத் தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள்.15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகம் மிளிரும். முகப் பரு, மசு, கருமிய நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.
முதலில் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தியபின், சோப்பை பயன்ப்[அடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட பேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளை கெடுத்துவிடும்.
_____________________

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)