மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன.
*மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலிருந்தே வாழ்கின்றன: இது உண்மையே.2019ம் ஆண்டு ‘கரன்ட் பயாலஜி’ இதழில் வெளியான ஆய்வுத் தகவல் இது. இதன்படி, மூட்டைப் பூச்சிகள் டைனோசர் காலத்திலேயே வாழ்ந்துள்ளன என்பதுஉறுதியாகியுள்ளது. மனிதர்களுடன் பல லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் உயிரி இது. ‘ஆய்வுத் தகவலின்படி பார்த்தால், மூட்டைப் பூச்சி நாம் நினைத்ததைவிட வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.’ என்றார் ஆய்வாளர் மைக் சிவஜோதி.
* வலது கைக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களால், இடது கைக்காரர்கள் அதிகம் இறக்கின்றனைர்: இது உண்மை. உலகத்தில் பெரும்பான்மையான மனிதர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்கள். இதனால் கருவிகள் சாதனங்கள் வலது கைக்காரர்களுக்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இவை இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தக் கடினமாக இருக்கும். ‘இப்படிக் கையாள்வதில் நேரும் விபத்துக்களால், ஆண்டுக்குத் தோராயமாக 2500 பேர் பலியாகின்றனர். என ‘தி மிரர்’ நாளிதழ்தகவல் தெரிவித்துள்ளது.
********************************