Mar 032022
 

மூளை பற்றிய உண்மைகள்:

• எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும்போது கூடுதல் செயல்திறனுடன் இயங்கும்.
• எந்த விஷயத்தையும் சரியாகப் பார்க்க உதவுகிறது. கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகப் பதிவு செய்யும். மூளைதான் அதை சீராக்கி உதவுகிறது.
• மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதாவது 25 வாட்ஸ் திறனுள்ள மின் விளக்கை எரிய செய்யும். மின்சாரத்தை மூளையால் தர முடியும்.
• மண்டை ஓட்டுக்குள் நகரும்போதும், உந்தும்போதும் வலி உணராது. இதனால் விழித்திருக்கும்போதே மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். மயக்க நிலையில் அறுவை சிகிச்சை செய்வதில்லை. ஏனென்றால் உணர்வுடன் இருக்கும்போதுதான் மூளை செயல்பாட்டை அறிய முடியும்.
• மூளையில் நரம்பு இழைகளின் நீளம் 1.61 லட்சம் கி.மீ. இதன் உந்து விசையால், உடலின் அனைத்து பாகத்திலும் அணுக்கள் உணர்வைப் பெறுகின்றன.
• உடலின் பெரும்பகுதி உறுப்புகள் 20 வயதில் வளர்ச்சியை நிறுத்திவிடும். ஆனால் 40 வயதிலும் மூளை வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களைக் கற்க விரும்பினால் எப்போதும் ஏற்கும்.
• மூளை அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தி அளவுக்கும் தொடர்பே இல்லை. உடலின் மொத்த எடையில் மூளை 2% தான் இருக்கும். ஆனால் மொத்த சக்தியில் 25%ஐ பயன்படுத்தும்.
• மூளை செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது பொருட்களைப் பற்றி சிந்தித்து, நினைவுபடுத்தி, கணினியில் பதிவு செய்கிறது.
• மூளை அணுக்களின் எண்ணிக்கை 2 வயதில் இருந்த அளவுதான் முதிர் வயதிலும் இருக்கும். ஒருவேளை குறையக்கூடும்.
• கர்ப்ப காலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். குழந்தையைப் பிரசவித்த ஆறு மாதங்களுக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
• வாழ்நாளில் மூளை சேமித்திருக்கும் தகவல் துணுக்குகளை ‘குவாட்ரில்லியன்’ என்ற மதிப்பால் அளக்கின்றனர். இக்குப் பின் 15 ஜீரோக்கள் போட்டால் இந்த மதிப்பு கிடைக்கும்; போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுத்தனம்.
************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)