Mar 212022
 

ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள் 2022-2024:

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும்..
ராகு கேது என்னும் இந்த இரண்டு பாம்புக் கிரகங்களுக்கும் சொந்த வீடு, ஆட்சி வீடு, உச்ச வீடு என்று எதுவும் கிடையாது. ஜோதிட நூல்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ரிஷபத்தை உச்ச வீடாகவும், விருச்சிகத்தை நீச வீடாகவும் கூறுவதுண்டு. இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த ராசி அதிபதிகளின் குணத்தையும் எந்த கிரகங்களோடு சேர்ந்திருக்கின்றனவோ அந்த கிரகங்களின் குணத்தையுமே பிரதிபலிக்கும். உதாரணமாக மீன ராசியிலிருக்கும்போது குருபகவானின் குணாதிசயங்களையும், கும்ப ராசியிலிருந்தால், சனி பகவானின் குணத்தையும் ராகு -கேதுக்கள் பிரதிபலிக்கும். ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் 3,7 ,11 ஆகிய இடங்களைப் பார்க்கும்.
பரிகார ஸ்தலங்களான காளஹஸ்தி கோவிலுக்கும், திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊருக்கு அருகிலுள்ள மன்னார்சாலாவுக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்து வரலாம். மேலும், திருநீர்மலை, திருவண்ணாமலை, குமரன்குன்றம் மற்றும் பர்வதமலை ஆகிய ஸ்தலங்களில் ‘கிரிவலம்’ செய்வதும் சிறந்த பரிகாரமாகும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்தியம் செய்து, ராகுகாலங்களில் ராகு ஸ்தோத்திரமும், எமகண்டங்களில் கேது ஸ்தோத்திரமும் பாராயணம் செய்து வந்தால், ராகு கேதுவால் வரும் தோஷங்கள் விலகும்.
ராகு ஸ்தோத்திரம்:
அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணயாம் யகம்
கேது ஸ்தோத்திரம்:
பலாச புஷ்ப சங்காசம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
கோரம் தம் கேதும் ப்ரணமாம் யகம்
இனி ராகு -கேது கிரகங்களுக்குரிய பெயர்ச்சிப் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.
மேஷம் :
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அப்போது ராகு உங்கள் ராசியிலும், கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தையும் பார்வையிடுகிறார். அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தையும் பார்வையிடுகிறார்.
இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.
இந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடத்தையும் 9ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.
ரிஷபம்:

வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.

ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளகும். எதிமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.

கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் .எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.
மிதுனம்:
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இந்த பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் கோர்ட் கேஸ்கள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ,எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நணப்ர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
இனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5-ம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மதத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அந்த விஷயத்தில் 5 ம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மீக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் கூட கேது 5ல் இருந்துகொண்டு சூது, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.
கேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏறப்ட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏறபடலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் 3-மிடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.
பொதுவாக கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மீகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.
கடகம் :
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அவ்வமயம்ரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். உறக்கம் கெடும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் பயன் இருக்காது.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் தீய பலன்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். புதிய நணப்ர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். குடும்பத்தில் ஒரு சுப காரியம் நடைபெறும். தொழிலில் நிதானமான முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான மகர ராசியிலும் இடம் பெயர்கிறார்கள் .

இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். சிலர் தங்கள் தொழிலில் புதிய உத்திகளையும் புதிய சிந்தனைகளையும் புகுத்துவார்கள். தொழிலில் ஏற்படும் பின்னடைவை மாற்றுவதற்காக இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வீரகள். சிலர் தொழில் சம்பந்தமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். காலம் தாழ்த்தி உணவு உண்ணவும் உறங்கவும் செல்வீர்கள். தொழிலை மேம்படுத்த சிலர் கடன் வாங்கித் தொழிலில் முதலீடு செய்து தொழிலை முன்னேற்ற முயலுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவரின் தலையீடு இருக்கும். இது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எத்தனை கடுமையாக முயன்றாலும், உங்கள் அறிவை உபயோகப்படுத்தினாலும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு முன்னேற்றம் இருக்காது.
சகோதரர்களுடன் விரோதம் ஏற்படும். வீடு, மனை இவற்றின் மூலம் விரயச் செலவு ஏறப்டும். ரியல் எஸ்டேட், உரம், மருந்துப் பொருள்கள் சம்பந்தமான தொழில் செய்வோருக்கு இது உகந்த நேரம் அல்ல. பலவித சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவீர்கள். சிலரது குடும்பத்தில் வயதானவர்களுக்கு உடல்நலம் குன்றும். துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் இடத்தையும் 12-ம் இடத்தையும் பார்க்கிறார். இதன்பலனாக தேவையற்ற வம்பு வழக்குகள் சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும்.சிலர் கோர்ட் கேஸ்களில் சிக்கி அலைந்து திரிந்து தொல்லைகளுக்கு ஆளாவார்கள் சிலர் தொழில் செய்யும் .ஸ்தாபனத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் , பணிமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள். தற்போது வழக்குகளில் வஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். பெரியோர், ஞானிகளின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கவேண்டி வரும். குடும்பத்தாரிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டுவதால் ,குடும்ப அமைதி கெடும். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில் இப்பொது திடீர் பாதிப்புக்கு உள்ளாகும். உங்களிடம் வேலை பார்த்து வந்தவர் உங்களுக்குப் போட்டியாக களம் இறங்குவர். கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். இதன் காரணமாக அவப்பெயர் ஏற்பட்டு தண்டிக்கப்படுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம்.வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரியும் நிலை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் பிரச்சினை வரும். சிலருக்கு வண்டிவாகனங்களால் நஷ்டமும் பொருட்செலவும் உண்டாகும். நிலம், வீடு சம்பந்தமான விரயத்தையும் நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிவரும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்து, விரக்தியுடன் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உண்டாகும். சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்கள்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும் 2-ம் இடத்தையும் பார்க்கிறார்கள். இதனால், உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை இருக்காது. நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. எதிரிகளால், தொல்லைகளும் துயரங்களும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பக்கவலை ஆட்டிப்படைக்கும். கணவன்-மனைவி உறவு சுகப்படாது .கடன் தொல்லைகள் அதிகமாகும்.
சிம்மம் :
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அச்சமயம் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கும் இடம் பெயர்கிறார்கள். இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.
கன்னி:

வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்:
அப்போது, ராகு பகவான் மேஷ ராசியிலும் கேதுபகவான் துலா ராசியிலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன்மூலம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இவற்றை நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.

8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். ராகு தனது 3-ம் பார்வையால், 10-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் உத்தியோகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்களையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். வீடு குடி மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கிடைக்கும். சிலருக்கு ஷேர்மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இருப்பினும் அதையே நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. பயணங்களின்போது 8-ம் வீட்டில் உள்ள ராகு சில எதிர்பாராத நிகழ்ச்சிகளை நடத்திவிட வாய்ப்புண்டு. அதனால் பயணங்களின்போது கவனம் தேவை. பயணங்களின்போது எடுத்துச் செல்லும் பொருள்கள் திருட்டுப்போகும் நிலையும் ஏறப்டலாம். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸ். கோர்ட், தண்டனை என்று அல்லல்படுவார்கள். வியாபாரிகள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தால் தொல்லை ஏறப்டும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறுவதை தவிர்ர்க்கவில்லையென்றால், காவல்துறையிடம் சிக்கி சிறை செல்வார்கள். அவமானப்பட நேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புண்டாகும் யோகம் வரும். அதுபோல சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் காலத்தில் யாருக்காபத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.

இந்த் சமயத்தில் யாருக்காகவும  ஜாமீனுக்குப் போகவேண்டாம். அதில் நீங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படநேரும். வரவு செலவுகளும் உங்களைக் கவிழ்த்துவிட்டுவிடும் நாணயம் தவறிப்போவீர்கள். பணத்தைப் பிறரிடம் கொடுத்துவைத்தால் ஏமாற்றப்படுவீர்கள். தானாகக் கிடைக்காத விஷயத்தை பணம் கொடுத்து சாதித்துக்கொள்ளவேண்டாம். சிக்கல் ஏற்படும். காரியமும் நிறைவேறாமல், செலவழித்த பணமும் கைவிட்டுப் போய், லஞ்சம் கொடுத்ததற்கான தணடனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். எடுத்த காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஆனால், அவர்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. பொதுவாக இந்த ராகு பெயர்ச்சி பண விரயம், எதிகளால் தொல்லை,அலைச்சலகள் தீய நட்பு, பெண்களால் அவமானங்கள் என்று ஏற்படும்.

இனி கேதுபகவானின் 2-ம் இட சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். தொழில் மந்த கதியை அடையும். வருமானம் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்கேது பகவான் தன்னுடைய 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், தன்னுடைய 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். சிலருக்கு வீடு, மனை நிலம் சம்பந்தமான விரயச் செலவுகளும் , தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும். வண்டிவாகனங்களில் விரயச் செலவுகள், வணடி வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவுகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களது கவனம் செல்லாது. மனநிம்மதி இருக்காது. பொருள் வீணாக செலவழியுமே தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது. வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள்.சிலர் சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.
துலாம்:
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். கடந்த ஒண்ணரை வருடங்களாக ராகு உங்கள் ராசிக்கு 8-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும் இருந்து உங்களுக்குப் பல வழிகளில் நிம்மதி இல்லாமல் செய்தார்கள். அவ்வப்போது சில நன்மைகள் நடந்தன என்றாலும், பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இப்போது வரப்போகும் பெயர்ச்சியின்போது ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய நண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.
உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும்.
உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏற்படும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.
விருச்சிகம்:
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அதாவது ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.
எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள்.
கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை தனது 3-ம் பார்வையால் பார்க்கிறார். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெறுக்குவீர்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். தேவைக்கேற்றபடி வருமானம் கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கக்கூடும்.
தனுசு::
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அதாவது, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.
கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.
மகரம்:
வருகிற மார்ச் மாதம் உங்கள் ராசிக்கு 4ல் ராகுவும் 10-ல் கேதுவும் சஞ்சரிக்க உள்ளார்கள்.வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இதற்குண்டான பலன்களைக் காணலாம்.
இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சில சோதனையான பலன்களே நடக்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்களாலும், கால்நடைகளாலும் நஷ்டம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். நீங்கள் கட்டும் கட்டடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது எதிரிகளின் தொல்லைகளாலோ பாதியில் நின்று போகும். சிலர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.. சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போவார்கள். வியாபாரம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளநேரும். பயணங்கள் வெறும் அலைச்சலிலும் சுகவீனத்திலும் முடியும். வேறு பயன் இருக்காது.
சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்த வேலையிலிருந்து ஊர் ஊராகச் சுற்றி அலையும் வேலைக்கு மாற்றம் வரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். விஷக்கடி ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். கடும் முயற்சி செய்தால் மட்டுமே, தேவையான மதிப்பெண் பெற்று, உயர் வகுப்பிலோ வேலைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். முடிவெடுப்பதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கவேண்டும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படும். சக தொழிலாளர்களிடம் மேலதிகாரிகளிடம் உங்கள் மீது குறை கூறுவார்கள். சிலருக்கு விருமில்லாத இடத்துக்கு பணிமாற்றம் வரும். சிலர் அவர்கள் தகுதிக்குக் குறைந்த வேலையில் அமர்த்தப்படுவார்கள். தசா புத்தி சரியில்லாத சிலருக்கு வீட்டில் திருட்டுப் போகும்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு. சிலர் பொதுப் பணியாற்றி புகழ் பெறுவார்கள். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். அதேசமயம் தேவைக்காக புதிய கடன்கள் ஏறப்டவும் வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கிருக்கும் கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கும். ஆனால், அலர்ஜி, தோல்நோய்கள் போன்ற சிறிய நோயகளின் உபத்திரவம் இருக்கும். ராகுவின் 11- ம் பார்வை உங்கள் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு சரிந்து உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். முக்கியத் தேவைக்கு வருமானம் இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். வார்த்தையில் சாதுர்யம் இல்லாமல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகும்.
எதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி சுமுகமாக இருக்கும்.
இனி கேதுவின் சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். தொழிலில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அதனால் கையில் பணப்புழக்கம் குறையும். கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அதுபோல் அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு விருப்ப ஓய்வில் சென்று விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பண விஷயத்தில் நாணயம் தவறி அவமானப்படக்கூடும். சிலர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்குள்ளாவார்கள். சிலர் வீண் ஜம்பத்தை விட முடியாமல் தேவையற்ற கஷ்டங்களைத் தானே தேடிக்கொள்வார்கள். ராகுவின் 11-ம் பார்வை உங்கள் 8-மிடத்தில் பதிவதால், கோர்ட் கேஸ்கள், வீண் வம்பு வழக்குகள் தேடி வரும். தொலலைகள் வந்து சேரும்.
பொதுவாக கேதுவின் 10-ம் இடத்து சஞ்சாரம், எதிர்காலச் சிறப்புக்காக இப்போது அடித்தளம் அமைத்துக்கொடுக்கும். ஞானிகள் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
கும்பம்:
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். அந்தப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட , அந்தப் பயணங்களால் உங்களூக்கு பல நன்மைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வெற்றிகளும் உண்டாகும்.
செய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதுபோல புதிய அரசியல்வாதிகள், ,பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அது உங்கள் வாழ்ககை முன்னேற்றத்துக்கு பல வழியில் உதவும். இந்த சமயத்தில் நீங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றியடைவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தவர்கள் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவார்கள். மேலும் சிலர் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய அதிகாரமும் பொறுப்புகளும் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வுறுவர். சிலருக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகி அதன்மூலம் புகழடைவர். கலையுலகில் இவர்களுக்கான ஒரு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இவர்களுடைய திறமை வெளி உலகுக்கு தெரியும் காலம் இது. இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும்.
சகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து உங்கள் கைக்கு வந்து சேரும். இதுவரை தாமதப்பட்டு வந்த நல்ல காரியங்கள் இப்போது தடையின்றி நடக்கும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையாக உங்கள் 11-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பயனாக புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருமணத்திலும் நல்ல நிலையை அடைவார்கள். குலதெய்வ வழிபாடினைத் தொடர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் பயனாக உங்கள் முகத்தில் பொலிவு கூடும். மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மனக்கவலை நீங்கும். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்ககை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். வேதாந்த எண்ணங்களும் உயரிய சிந்தனைகளும் உருவாகும். தந்தையின் உடல்நலமும் நீங்கள் அக்கறை காட்டும் பெரியவர்களின் உடல்நலமும் பாதிப்படையலாம். சிலருக்கு தடைபட்டுப்போன குலதெய்வ வழிபாடு நல்லபடியாக நடைபெறும். மனம் ஞான விஷயங்களில் நாட்டம் கொள்ளும். கோவில்களிலும், மடங்களிலும் உயர் பதவிகள் கிடைக்கும். தர்மம், நீதி நிலைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். ஞானிகள் ,பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்கள் திறமையை இப்போது பலரும் தெரிந்துகொண்டு பாராட்டுவர். வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான செல்வத்தைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதைப் பெரிதாக நினைப்பீர்கள். வாழ்க்கையில் பலவித வசதிகள் கிடைத்தாலும்கூட அவற்றை ஒரு நியதிக்கு உட்பட்டே அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரம் காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.
கேது பகவான் 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். மருத்துவச் செலவு கூடும். கேது பகவானின் 11-ம் பார்வை உங்கள் 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப்படையலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் சில நன்மைகளும் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் அமையும்.
சிலருக்கு சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்து வந்து சேரும். பயணங்களால் லாபகரமான பலன்களே கிடைக்கும். தாய் தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம். மருத்துவச் செலவு கூடும்.அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியோடிருக்கும்.
மீனம்:
வருகிற மார்ச் மாதம் 21-ம் தேதியன்று ராகு பகவான் மேஷ ராசிக்கும், கேது பகவான் துலா ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும் சஞ்சரிக்கவுள்ளார். இந்த சஞ்சாரங்கள் உகந்ததல்ல. எனவே இங்கு கூறப்போகும் ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். நன்மையைத் தரும் விதமாகவே குரு அமைந்துள்ளதால், கெடுபலன்கள் மாறி நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது. இனி பலன்களைப் பார்க்கலாம்.
தற்போது 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.
அரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில் குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும் அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும் தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் சனியின் சஞ்சாரம் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.
கேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
***************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)