May 142022
 

லெமன் கேக்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 2 கப்; சர்க்கரை-3 கப்; பால்-1 கப்; நெய்-1கப்; ஆரஞ்ச் அல்லது லெமன் கலர்; -1 சிட்டிகை; எலுமிச்சம்பழம்-5; முந்திரி பருப்பு-10; ஏலக்காய் பொடி- 1 சிட்டிகை; வெனிலா எஸென்ஸ்- 1 தேக்கரண்டி.

செய்முறை:

மைதா மாவில் சிறிது நெய் கலந்து பச்சை வாசம் போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும். அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்துகொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய எலுமிச்சம்பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும், சர்க்கரையைக் கொட்டி கம்பிப் பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். பிறகு அதில் மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். கலவை நன்றாக நுரைத்து வரும்போது எலுமிச்சை விழுதை அதில் போட்டு நன்றாகக் கிளறவும். பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றவும்.
இப்போது அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்ச் கலர் சில துளிகள், வெனிலா எஸென்ஸ் சில துளிகள், ஏலக்காய்த்தூள், பொடிப் பொடியாக உடைத்து நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் லிருந்து இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியதும் துண்டுகளாக வெட்டி பறிமாறவும்,
அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் ‘லெமன் கேக்’ரெடி.
*************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)