Jul 232022
 

வாரராசி பலன் 24.7..2022 முதல் 30.7..2022 வரை அனைத்து ராசிகளுக்கும்


மேஷம் :
இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து இதமான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார
உங்களைச் சுற்றிலும் நடப்பதைக்கூட தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். இதுவரை மனதில் நம்பிக்கையாகப்பட்ட விஷயங்கள் சிறு அளவில் சிரமம் உருவாக்கும். குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வதால், மனதில் நிம்மதி உருவாகும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். புத்திரரின் கவனக் குறைவை சரி செய்வதில் இதமான அணுகுமுறை அவசியம். உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் செலவுகளைச் சமாளிக்க பணக்கடன் பெறவேண்டிய நிலை இருக்கும். குடும்பப் பெண்கள் பணிகளில் நிதானம் பின்பற்றுவர். மாணவர்கள் உரிய பயிற்சியினால், எதிர்பார்த்த தேர்ச்சிவிகிதம் பெறுவர்.
ரிஷபம்:
இல்லறத்துணை அன்பு பாசஹ்துஅன் கூம்ப நலன் பேணுவார். பணவரவு அஹிக அளவில் உருவாவதற்கான புதிய வழிவகை உருவாகும். நன்னடத்தை குறைவான சிலர் சுய லாபம் பெற நட்பு பாராட்டுவர். அவர்களிடமிருந்து விலகுவதால், சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம். வீடு வாகனத்தில் தேவையான பாதுகாப்பு அவசியம். புத்திரர் செயல்திறன் வளர்ந்து, படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரியால் தொல்லைஅணுகாத சுமுக வாழ்வு பெறுவர். பூர்வீக சொத்தில் கிடைக்கிற பண வருமானம் கூடும். உடல்நலம் ஆரோக்கியம் பெற ஒவ்வாத உணவு வகை தவிர்க்கவும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து உபரி பண வருமானம் கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்திடம் நற்பெயர் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்க பண வசதி துணை நிற்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் சாகசம் செய்யக்கூடாது.
மிதுனம்:
இல்லறத்துணை சுய கௌரவ சிந்தனையுடன் நடந்துகொள்வார். இஷ்ட தெய்வ அருள்பாலித்து, நற்செயல்கள் இனிதாக நிறைவேற துணை நிற்கும். எதிரியால் வரும் சிரமங்களை சமயோசித புத்தியால் சரி செய்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் ஆடம்பரப் பொருள் கேட்டுப்பெறுவதில் ஆர்வம் கொள்வர். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களைப் பணியமர்த்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சில மாற்றங்களைப் புகுத்தி, உற்பத்தி, விற்பனையில் சராசரி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதிப்பதால், நற்பெய்ரைப் பாதுகாக்கலாம். பெண்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்கேற்ப செலவிடுவது நல்லது. மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைப்படி நப்பது கூடுதல் நன்மை பெற உதவும்.
கடகம்:
இல்லறத்துணை மனதில், உங்கள் மீதான நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டும். புதிதாக அவசரப் பணி உருவாகி தொல்லை தரலாம். அனுபவ அறிவு குறைவான சிலர் சொல்லும் அறிவுரை, உங்கள் மனதில் சங்கடம் உருவாக்கும். குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி பேசுவது நல்லது. வாகனப் பராமரிப்பு மேற்கொள்வதால், பயண முறை எளிதாகும். புத்திரரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற சத்தான உணவு வகைகளை உண்ணத் தரவேண்டும். எதிரியினால் சிரமம் அணுகாமல் இருக்க மௌனமாக விலகுவது நல்லது. சந்தைப் போட்டியில் தொழிலில் உற்பத்தி, விற்பனை மந்த கதியில் இயங்கும். பணியாளர்கள் பணியில் குறைபாடு வராத அளவில், ஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடவேண்டும். பெண்கள் சேமிப்புப் பணத்தை சிறு செலவுகளுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் படிப்பில் சராசரி நிலையை அடைவர்.
சிம்மம்:
இலல்றத்துணை உங்கள் கருத்துக்களைக் கேட்டு நடந்துகொள்வார். வாழ்வில் முன்னர் பெற்ற நற்பெயர் மற்றும் பண வரவைக்கோண்டு மனதில் உத்வேகமுடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாகி நட்பு மனதுடன் இயன்ற அளவில் உதவுவர். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் குறைபாடு வராமல் நடந்துகொள்ளவேண்டும். புத்திரர் கேட்கிற பொருள்களை அதிக தரம் உள்ளதாக வாங்கித் தருவீர்கள். உடல்நலம் ஆரோக்கிய பலம் பெற மருத்துவ சிகிச்சையும் ஓய்வும் உதவும். தொழிலில் அபிவிருத்திப்பணி மேற்கொள்ளத் தேவையான நிதிஉதவி கிடைக்கும். பணியாளர்கள் சலுகைப் பயன் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் தெய்வீக வழிபாடு நடத்துவதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் நண்பர்களிடம் படிப்பு தவிர பிற விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
கன்னி:
இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் ,செயலைப் பாராட்டுவர். புதிய முயற்சிகளை தகுந்த பரிசீலனைக்குப் பின் செயல்படுத்துவது நல்லது. வாழ்வில் முன்னர் செய்த நற்பலன்களின் பலன் இப்போது கிடைத்து மனதில் ஆறுதல் தரும். உறவினர்கள் புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர். புத்திரரின் சுற்றுலா விருப்ப எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சீரான ஓய்வுமுறை உடல்நலம் பாதுகாக்க உதவும். தொழில் வளர்ச்சி பெற சிலரது உதவியை நாடுவீர்கள். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் நல் அன்பு பாராட்டுவர். குடும்பப் பெண்கள் உறவினர்களை நன்கு உபசரித்து நற்பெயரைப் பாதுகாத்திடுவீர். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பு பெறும் வகையில், படிப்பில் அதிக அக்கறை கொள்வர்.
துலாம்:
இல்லறத்துணை உங்கள் முயற்சிகள் வெற்றியடைய உறுதுணையாக இருப்பார்கள். சிலர்மீது கொண்டிருந்த அதிருப்தி எண்ணங்கள் விலகி, பணிகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பச் செலவுக்கான பண வசதி திருப்திகர அளவில் இருக்கும். உடன்பிறந்தவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். வெளியூர்ப் பயணம் பயன் கருதி மேற்கொள்ளலாம். பூர்வீக சொத்திலிருந்து வரும் பண வருமானம் அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகர அளவில் முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை பயன்படுத்துவதால், உபரி பண வரவு இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்க, சீரான பணவசதி இருக்கும். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து, சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.
விருச்சிகம்:
இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். புதிதாக உருவாகிற பணி, மனதில் சோர்வு, கஷடத்தை உருவாக்கும். குடும்பத்தின் எதிர்கால நலனை கவனத்தில் வைத்து செயல்படுவது அவசியமாகும். பேச்சில் உண்மை, வசீகரம் இருப்பினும், தேவைப்படுகிற தருணங்களில் மட்டும் நண்பர்களிடம் கருத்துக்களைச் சொல்வது நல்லது. வாகனத்தில் மிதவேகம் ,பயணத்தை எளிதாக்கும். புத்திரர் செயல்களில் கவனக்குறைவு ஏற்படும். தகுந்த கண்காணிப்பு பின்பற்றுங்கள். வழக்கு, விவகாரத்தில் உரிய தீர்வு பெறுவதில் தாமதம் இருக்கும். தொழிலில் வருகிற இயையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணியாளர்கள் சலுகைப் பயன் பெற கூடுதல் முயற்சி உதவும். குடும்பப் பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை வழங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்லக்கூடாது. .
தனுசு:
இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவிர்கள். உங்களின் வாழ்வியல் நடைமுறை சிறந்து , உறவினர் நண்பர்களிடம் கூடுதல் அந்தஸ்தைப் பெற்றுத் தரும். மனதில் வடிவமைத்த திட்டங்களை செயல்படுத்தி நன்மை அடைவீர்கள். தம்பி, தங்கையின் மங்கல நிகழ்ச்சியை நடத்த அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்க சீரான பண வசதி துணை நிற்கும். உடல்நல ஆரோக்கியம் நன்றாக அமைந்து, விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து லாப விகிதம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்:
24.11.13 அன்று இரவு 3.53 மணிவரை உள்ளது. இந்த நேரங்களில் யாருடனும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளைத் ஒத்திப் போடவும். பயணங்களையும் தவிர்க்கவும்.
மகரம்:
இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வார். சுய திறமைகளை வளர்ப்பதில் கூடுதல் அக்கறை கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். பலநாள் தாமதமான பணி ஒன்றை உத்வேக மனதுடன் செயல்படுத்தி, திருப்திகர அளவில் நன்மை பெறுவீர்கள். வாகனத்தில் பராமரிப்புப் பணி தேவைப்படும். புத்திரரின் எண்ணங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவீர்கள். எதிர்மனப்பாங்கு உள்ளவரிடம் பொது விஷயம் பேசுவதைத் தவிர்க்கவும். தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை மாற்று உபாயத்தினால் சரி செய்வது அவசியம். பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பெண்கள் தாய்வீட்டு சீர்முறை பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் உடல்நல ஆரோக்கியம் சரிவர பாதுகாப்பதால் மட்டுமே படிப்பில் ஆர்வமும் அதனால் முன்னேற்றமும் மேம்படும்.
சந்திராஷ்டமம்:
24.11.13 அன்று இரவு 3.53 மணி முதல்25.11.13,26.11.13 மற்றும் 27.11.13 அன்று பகல் 1.27 மணி வரையில் உள்ளது
இந்த நேரங்களில் யாருடனும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளைத் ஒத்திப் போடவும். பயணங்களையும் தவிர்க்கவும்.
கும்பம்:
இல்லறத்துனை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். மனதில் புத்துணர்வும் செயல்களில் கூடுதல் பரிமளிப்பும் உருவாகும். புதிய முயற்சிகளை நிறைவேற்றி, அதிக அளவில் நன்மை பெறுவீர்கள். சமூகப் பணிகளிலும் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் ,மனை வாங்க அனுகூலம் உள்ளது. புத்திரர் உங்கள் அறிவுரைகளை மனதார ஏற்று நடந்துகொள்வர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும். உத்தியோகஸ்தர் சிறப்பாக செயல்பட்டு , நிர்வாகத்திடம் பாராட்டு, வெகுமதி பெறுவர். குடும்பப் பெணக்ள், கனவரின் கூடுதல் அன்பு, பண வசதி கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.
சந்திராஷ்டமம்:
27.11.13 அன்று பகல் 1.27 மணி முதல் 28.11.13 மற்றும் 29.11.13 அன்று இரவு 8.35 மணி வரை உள்ளது. இந்த நேரங்களில் யாருடனும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளைத் ஒத்திப் போடவும். பயணங்களையும் தவிர்க்கவும்
மீனம்:
இல்லறத்துணை கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், குடும்ப ஒற்றுமை சிறப்புறும். மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் உங்களின் நல்ல செயல்களைப் பற்றிப் பேச வேண்டாம். எளிதான பணியும் நிறைவேறுவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். வீடு, வாகனப் பாதுகாப்பில் உரிய கவனம் தேவைப்படும். புத்திரர் பொறுமைக்குணம் பின்பற்றி, உங்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவார். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். தொழிலில் அளவான மூலதனம் ,கடின உழைப்பு என்ற குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் சமரச பேச்சுவார்த்தைகளை சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து துவங்கவும். பெண்கள் கணவரின் சம்மதமின்றி பணம் கடன் கொடுக்க , வாங்கக் கூடாது. மாணவர்கள் நண்பர்களின் நல் அன்பைப் பெறுவர்.
சந்திராஷ்டமம்:
29.11.13 அன்று இரவு 8.35 மணி முதல் 30.11.13 மற்றும் 1.12.13 வரை உள்ளது. இந்த நேரங்களில் யாருடனும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளைத் ஒத்திப் போடவும். பயணங்களையும் தவிர்க்கவும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*********************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)