Jul 092022
 

வார ராசி பலன்  10.77.2022 முதல் 16.7.2022 வரை-

மேஷம்
அக்கம்பக்கத்தாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சண்டைகள் ஓயும். உங்கள் மதிப்பு மரியாதைகளை சமூகத்தில் உயர்த்திக்கொள்ள தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். உங்கள் உழைப்பின் முழுப் பயனை அனுபவிப்பீர். அத்துடன் தாராள பண வரவும் கிடைக்கும். வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து, வருமானம் பெருகும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது மித வேகத்தைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகள் தகுதி, திறமைகளில் மேம்பட்டு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும, முன்னுரிமை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய செலவுகளை உபரி வருமானத்தின் மூலம் செலவு செய்வர். மாணவர்கள் உற்சாகத்துடன் படித்து, கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.
ரிஷபம்:
நண்பர்கள் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாக உதவி புரிவர். நீங்கள் அவர்கள் மூலம் அளப்பரிய பலன்களை அடைவீர்கள். மனதில் இனிய எண்ணங்கள் உருவாகி கூடுதல் நம்பிக்கை தரும். வீடு வாகனத்தில் பராமரிப்பு பணிகள செய்து கூடுதல் பயன் பெறுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்காக உங்களை வற்புறுத்துவர். நீங்கள் இயன்றவரை அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, குடும்ப ஒற்றுமையைப் பாதுகாப்பீர்கள். எதிரிகளின் தொல்லைகள வலுவிழந்து போகும். உங்கள் கை மேலோங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள். உங்கள் வியாபாரத்தில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து நல்ல வருமானத்துக்கு வழி பிறக்கும். இல்லறத்துணை மனதில் நம்பிக்கை அதிகரிக்க ஆறுதல் வார்த்தைகளைப் பேசுவது அவசியம். உத்தியோகஸ்தர்கள பணியாளர்களை நல்ல முறையில் வழி நடத்தி, திட்ட இலக்கைப் பூர்த்தி செய்வர். பெண்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி குடும்ப விஷயங்களை கோட்டை விடும் சூழல் உள்ளது. கவனம் தேவை. மாணவர்கள சுகாதாரமற்ற இடங்களில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
மிதுனம்:
தொழில், வியாபாரத்தில் முன்னேற மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள் சிலர் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாக நடந்து அவதியுறுவர். அனுபவ அறிவை உபயோகிப்பதால், சிலர், பணிகளில் கூடுதல் நன்மை பெறுவர்.உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை கைதூக்கிவிடுவீர்கள். வீடு வாகனத்தில் வசதிகள ஓரளவுக்கு இருக்கும். முன்பின் அறியாத பெண்களிடம் அளவுக்கு மீறி பழகவேண்டாம். அவர்களால் தொல்லை உண்டாகும்.இல்லறத்துணை உங்களின் கருத்துக்களை அன்புடன் ஏற்றுக்கொள்வர். பிள்ளைகள் நற்குண நற்செயல்களால் உங்களுக்கு பெருமை தேடித் தருவர். பூர்வீக சொத்திலிருந்து கிடைக்கிற பண வரவு அதிகரிக்கும். அஜீரணக் கோளாறுகளைத் தவிர்கக், நேரத்துக்கு உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் கணவரின் அன்பும் , தாராள பண வசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்ககை நடத்துவர். மாணவர்கள் நல்ல முயற்சியுடன் படித்து தேர்ச்சியடைவர்.
கடகம்:
சில கிரகங்களின் சுழற்சி உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், முக்கிய செலவுகளுக்கான பண வசதி திருப்திகரமாக இருக்கும். பணிகளில் நிதானமும் சமோயோசித புத்தியும் பின்பற்றினால் இக்கட்டுகளிலிருந்து தபப்லாம். பிள்ளைகளின் கவனக் குறைவை சரி செய்வதில் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும். இளைய சகோதரர்களுக்கு உங்கள் மீதான அன்பு பாசம் அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடமிருந்து விலகி உங்கள் சொந்தப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் உங்கள மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தொழிலில் அளவான மூலதனம்-அதிகமான உழைப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது லாபத்துக்கு வழி வகுக்கும். பணியாளர் கூடுதல் வேலைகளை பண வரவு கருதி ஏற்றுக்கொள்வர். குடும்பப் பெண்கள் உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள் வெளியில் சுற்றுவதைத் தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்துவர்.
சிம்மம்:
கிரக நிலவரம் சாதகமாக உள்ளது. தொழில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து நல்ல லாபமும் வருமானமும் இருக்கும். பணியாளர்களுக்கு இதுவரை தாமதமாகி வந்த சலுகைப் பயன் வெகு சுலபமாக வந்து சேரும். உங்கள் வார்த்தைகள் நியாயமானதாக இருந்தாலும் உரிய இடங்களில் மட்டும் பேசுவது நல்லது. மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். சந்தோஷ நினைவுகளை அசைபோட்டபடி இருப்பீர்கள். புதிய பணிகளை ஆர்வமுடன் நிறவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்க சிலருக்கு யோகமுண்டு. பிள்ளைகள் விரும்பும் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்கித் தருவீர்கள். உடல்நலம் சிறக்கும். இலல்றத் துணை குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார். குடும்பப் பெண்கள் பிள்ளைகளின் நலனில் கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள் கடின முயற்சியால், சீரான தேர்ச்சி விகிதம் பெறலாம்.
கன்னி:
இந்த வாரம் சில கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. குடும்பத் தேவைகள் நெருக்குவதால், அன்றாடப் பணிகளில் உங்களை ஆர்வம் கொள்ள வைக்கும். இல்லறத் துணை உங்களின் நல்ல குணங்களை மனமுவந்து பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் தாமதங்களையும் இடையூறுகளையும் தாமதமின்றி சரி செய்வது அவசியம். பணியாளர்கள் பணியில் குளறுபடி வராத அளவில் முன்யோசனையுடன் செயல்படவேண்டும். குடும்பப் பெண்கள் சேமிப்பு பணத்தை அத்தியாவசிய செலவுக்குப் பயன்படுத்துவர். பூர்வீக சொத்தைப் பாதுகாக்க நம்பகமானவர்களைப் பணியமர்த்துவது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். உறவினர்களின் மாறுபட்ட செயல்களால், மனதில் விரக்தி அடைவீர்கள். பணச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்லது. வாகனப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். குடும்பப் பெண்கள் சேமிப்பு பணத்தை அத்தியாவசிய செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் நண்பர்களின் துணையுடன் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
துலாம்:
சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் சாதகமற்றும் இருக்கின்றன. நண்பர்களும், பிள்ளைகளும் உங்கள்மீது கொண்ட அதிருப்தியை சரி செய்வீர்கள்.இளைய சகோதரர் உறுதுணையாக நடந்துகொள்வர். வாகனப் பராமரிப்பு அவசியம். சுய கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள தாராள அளவில் பணச் செலவு செய்வீர்கள். நண்பர்களிடம் பேசுவதில் நிதான அணுகுமுறை நல்லது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தியும் பணவரவும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து பணி புரிவது நல்லது. குடும்பப் பெண்கள் தாய்வீட்டு உதவி கிடைத்து பெருமிதம் கொள்வர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால், நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர். விளையாட்டுக்களில் சாகசம் செய்யக்கூடாது.
விருச்சிகம்:
இந்த வாரம், உங்கள் மனதில் புதிதாக உருவாகும் ஞானத்தின் விளைவாக் அனைத்துப் பணிகளையும் திறமையுடன் முடிப்பீர்கள். தாராள பணவரவை குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்குப் பயன்படுத்துவீர்கள். நண்பர்களுடனான நட்புறவு பலப்படும். புதிய வீடு வாகனம் வாங்க சிலருக்கு அனுகூலம் உண்டு. புத்திரரின் அறிவுத் திறன் பரிமளித்து நற்பெயர் பெறுவர். சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு உடல்நலம் பாதுகாத்திடுவீர். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து லாப விகிதம் கூடும். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும். பெண்கள் புத்தாடை , அணிகலன்கள் வாங்குவர். மாணவர்கள் நன்கு படித்து, ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.
தனுசு:
இந்த வாரம் நவ கிரகங்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் வாழ்வில் கூடுதல் வளங்கள் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி தாராள பணச் செலவில் மேற்கொள்வீர்கள். பணியாளர், புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வர். பாராட்டும், வெகுமதியும் பெறுவர். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் இனிதாக அமையும். பூர்வீக சொத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் இனிதாகவும், உபயோகமாகவும் அமையும். எவ்வித தொந்தரவுகளும் இல்லாத சுமுக சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணை உங்கள் நற்குணங்களைப் பற்றி உறவினர்களிடம் பெருமையாகப் பேசுவர். பெண்கள் எதிர்கால நலனுக்கான அறிவுரைகளை கணவரிடம் இதமாகக் கூறுவர். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து அதிக மதிப்பெண் பெறுவர்.
மகரம்:
இந்த வாரம் கிரக சுழற்சிகள் உங்களுக்கு சாத்கமாக இல்லை. இல்லறத்துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் உள்ள கூடுதல் அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. எந்த விஷயத்திலும் முன்யோசனையுடன் நடந்துகொள்வது அவசியம். பணியாளர்களுக்கு குடும்பச் செலவு அதிகரிப்பதால் கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். புதிய இனங்களில் செலவு அதிகரித்து, சேமிப்பு பணம் குறையும். உங்கள் சொல்லுக்கு மரியாதை தருபவர்களிடம் மட்டும் யதார்த்தமாக பேசிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் அளந்து , முன்யோசனையுடன் பேசுவதே சிறந்தது. வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு முறைகள் அவசியம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாகனத்தில் இடம் தரவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதத்தை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. சீரான ஓய்வு உடல்நலத்துக்கு உதவும். குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமின்றி, யாரிடமும் பணம் கொடுகக் வாங்கக் கூடாது. மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லவேண்டாம்.
கும்பம்:
இந்த வாரம் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. திட்டமிட்டபடி ஆன்மீக வழிபாடு நடத்தி, மனதில் புத்துணர்வு கொள்வீர்கள். முக்கியமான செயல் ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில் வியபாரத்தில் அதிக முன்னேற்றமும் புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பான பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். குடும்பத் தேவைகளை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணம் சிறப்பாக அமைந்து புதிய அனுபவம் பெற்றுத் தரும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வார். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாராள பண வசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவரக்ள் நன்றாகப் படித்து, பெற்றோரிடம் பரிசுப் பொருள் பெறுவர்.
மீனம்:
கிரகங்கள் சாதகமற்றுக் காணப்படுவதால், பகைவர்களிடமிருந்து விலகியிருக்கவும். நேருக்கு நேர் போட்டியில் ஈடுபடவேண்டாம் . ஒதுங்கி நடந்துகொள்வதால், சிரமங்களிலிருந்து தப்பிக்கலாம். இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க நல்ல ஆலோசனைகள் சொல்வார்கள். இளைய சகோதரர் உறுதுணையாக நடந்துகொள்வார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் கெட்ட சகவாசத்தை ஒழிக்க மிகுந்த எச்சரிக்கை அவசியம். பணக்கடன் நிர்ப்பந்தம் அளிப்பதால் சிறு கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். தொழிலில் உருவாகும் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராகும். இயந்திர தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் சேமிப்பு பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துவர். மாணவ்ர்கள் புதியவர்களை நண்பராகச் சேர்த்துக்கொண்டு தொந்தரவுகளுக்கு ஆளாக நேரும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் ஜாதகத்துக்கு ரூ. 950/- செலுத்தி, விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள் விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்.]

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)