வார ராசி பலன்- 13.11..2022 முதல் 19.11…2022 வரை:
மேஷம்:
உங்கள் பிள்ளைகளின் விஷயங்கள் உங்களுக்கு கவலையளிக்கும். உங்கள் மூதாதையர் சொத்து வந்து சேரலாம்; அல்லது வரக்கூடிய வழி உருவாகலாம். உங்களைப் படுத்திய நோய் குணமாகும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு இது நல்லலநேரம். உன்ளுடைய சொந்தக்காரர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். உங்கள் எதிரிகள் பலமிழந்து போவார்கள். குடும்ப மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்:
உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத் தேவைகள்எல்லாவற்றையும் தீர்த்து வைப்பீர்கள். உங்கள் கடன் சுமைகளையும் கொஞ்சம் குறைத்துக்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் குறையும். உங்கள் மனைவியுடன் பிணக்கு தீர்ந்து சுமுக நிலை உண்டாகும். உங்கள் குடும்பத்தினரின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் சொந்தக்காரர்கள் உங்களிடையேயுள்ள பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குவார்கள். நீங்கள் அவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். அலுவலக வேலைக்காக வெளியூர் செல்ல நேரும். குடும்ப சந்தோஷம் மேலோங்கும்.
மிதுனம்:
பணம் வரும். சொந்தக்காரர்களும் சகோதர சகோதரிகளும் உறவோடிருப்பார்கள். தந்தையுடன் உண்டான மனக்கசப்பு அகலும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல சூழ்நிலை உருவாகும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை உங்கள் வியாதியைக் குணமாக்கும். பணியில் உள்ளவர்கள் நற்பெயர் பெறவேண்டி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிலம், வீடு சம்பந்தமான விஷயங்கள் நல்லபடியாக முடியும். உங்கள் குழந்தைகள் சம்பந்தமாக மகிழ்ச்சியடைய முடியும். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியுறச் செய்யும். குடும்பத்தில் சந்தோதோஷம் பெருகும்.
கடகம்:
உங்கள் ஆரோக்கியம் கவனிக்கப்படவேண்டும். ஞாபக மறதியாலும், ஒருவித மனக்குழப்பத்திலும் கட்டுண்டு தவிப்பீர்கள். மற்றவர்கள் மீது காரணமில்லாமல் கோபப்படுவீர்கள். எப்போதும் உணர்ச்சிவசப்படுவீர்கள். சொந்தக்காரர்களால் எவ்வித பிரயோஜனமுமில்லை. பெண்கள் விஷயங்களில் அதிகம் ஈடுபட வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அடிக்கடி பிரச்சினை கொடுக்கும் வண்டியை மாற்ற முயற்சிப்பீர்கள். ஏற்கெனவே தள்ளிப்போடப்பட்ட பிரயாணங்களை இப்போது மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தில் டோஸ் வாங்குவார்கள். உங்கள் பிள்ளைகள் தங்கள் படிப்பையோ வேலையையோ சரிவர கவனைத்துக்கொள்வதன் மூலம், உங்களுக்குப் பிரச்சினை கொடுக்க மாட்டார்கள். தாயின் உடல் நலனில் கவனம் தேவை.
சிம்மம்:
உங்களிடம் தேவையான பணம் புழங்கும். உங்கள் பிள்ளைகள் சம்பாதிப்பதால் அவர்கள் மூலம் பணம் கிடைக்கும் யோகமும் சிலருக்கு உண்டு. உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உங்களுடைய முன் கோபத்தினால் நீங்கள் தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். சகோதரர்களாலும் உறவினர்களாலும் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உங்கள் தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்கிடையே சுமுகமான உறவு நிலவும். அலுவலக வேலையில் சில தடங்கல்கள் இருக்கும். உங்களுடைய ஈகோவினால், உடன் பணியாற்றுபவர்களின் உதவியையும் நீங்கள் இழக்கிறீகள். பயணங்களால், உங்களுக்கு எவ்வித பலனுமில்லை.
கன்னி:
உங்களுடைய ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேவையான பண வரவு இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நிலம், வீடு சம்பந்தமான விஷயங்களில் மகிழ்ச்சியடைவீர்கள். மூதாதையரின் சொத்துக்களை அடைய முடியும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வேலைகளில் வெற்றி கிட்டும். அரசியல்வாதிகள் பிரகாசிப்பர். பணியிலுள்ளோர் தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். ரியல் எஸ்டேட் துறையிலுள்ளோருக்கு அலைச்சல் மிஞ்சுமேயொழிய ஆதாயம் இருக்காது. கணவன்- மனைவிக்கிடையே உள்ள் கருத்து வேறுபாடு நீங்கும். சகோதரர்களும் உறவினர்களும் உதவியாக இருப்பார்கள். நண்பர்களுடன் மகிழ்ந்திருபீர்கள்
துலாம்:
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்துக்குத் தேவையானவற்றை வாங்குவீர்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வீர்கள். சொந்தக்காரர்கள், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும் . மகிழ்ச்சி பெருகும். உல்லாசப் பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். நிலம், வீடு வாங்கவதில் நல்ல ஆதாயம் காண்பீர்கள். வங்கிக் கடன் சிரமமின்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இந்த நேரம் சரியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சன்டையிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் சகோதரிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வீர்கள்.
விருச்சிகம்:
பணம் புழங்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். சுமுகமான நல்லுறவு பெருகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிக்கலில் மாட்டிக்கொள்வர். வீணான பயணங்களால் உங்கள் உடல்நலம் கெடுவதுதான் மிச்சம். உங்கள் ஆரோக்கியம் சரியாக இருக்காது. தந்தையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.. நீங்கள் கடுமையாக பணியாற்ற வேண்டியிருக்கும் .அலுவலகத்திலும் வீட்டிலும் பொறுப்புகள் நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை.
உங்கள் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு உங்களுக்கு பணம் கிடைக்கும். புதிய ஆடைகளையும் அணிமணிகளையும் வாங்கும் அளவுக்கு பணம் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள். சகோதரர்களும் சொந்தக்காரர்களும் உதவி செய்வார்கள். பெண்களால் உங்களுக்கு சகாயம் கிடைக்கும். அதிக வேலைப்பளு இருக்கும். மற்றவர்களிடமும் உங்கள் மேலதிகாரிகளிடமும் பாராட்டு பெறவேண்டும் என்று காரியம் செய்ய நினைப்பீர்கள். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு மறையும். அரசியல்வாதிகள் மூலமும் அதிகாரிகள் முலமும் கஷட்ம் வரும். தந்தையுடன் மன வேறுபாடு கொள்வீர்கள். உங்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயின் உடல் நலம் தேறும்.
மகரம்:
பணவரவு நன்றாக இருக்கும். உங்களிடம் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்துவார்கள். தேவையான வருமானமும் கிடைக்கும். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்கும். சகோதரர்களும் உறவினர்களும், ஒத்தாசையாக இருக்காமல் தொல்லை கொடுப்பார்கள். மூதாதையர் சொத்து கைக்கு வராமல் இழுத்தடிக்கும். நிலம், வீடு சம்பந்தமான விஷயங்கள் கழுத்தறுக்கும். போலீஸிலிருந்து ஏதாவது தொல்லை வரலாம். போலீஸ்காரர்களின் தொடர்பு வேண்டாம். அரசியல்வாதிகளிடம் நம்பி ஒப்படைத்த வேலைகள் நல்லபடியாக முடியும். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் உங்களை நெருக்குவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உல்லாசமாக பொழுது கழியும். கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு மிளிரும்.
கும்பம்:
இந்த வாரம் நீங்கள் வெற்றியடையும் நேரம். தெவையான அளவு பணப்புழக்கம் இருக்கும். விழாக்களிலும் விருந்துகளிலும் கலந்துகொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வீர்கள். ஆனால், உங்கள் சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். பணியாளர்கள் வேலையில் உள்ள கெடுபிடிகளால் கஷ்டப்படுவார்கள். தரகுத் தொழிலில் உள்ளவர்கள் பிரகாசிக்க முடியும். அரசியல்வாதிகளுக்கு மேலிட பாராட்டுதல் கிடைக்கும். கணவன்-மனைக்கிடையே சிறுசிறு பிரச்சினைகளைக்குக்கூட முக்கியத்துவம் கொடுத்து சண்டையில் ஈடுபடுவார்கள் . நீங்கள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் தடைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. உங்களுடைய மதிப்பு மரியாதை பாதிக்கப்படும் நற்பெயர் கெடும். எந்த குறிக்கோளுமின்றி அலைச்சல் ஏற்படும். ஆனால் உங்கள் தொடர் முயற்சி வெற்றியளிப்பதாகவே உள்ளது.
மீனம்:
உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டு அது மெதுவாக வளர்ச்சியடையும். முக்கியமான சில பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். அவர்களால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் பணியிடத்தில் வேலைப்பளு காரணமாக சிரமப்படுவார்கள்.பெண்களால் தொல்லை ஏற்படும். சகோதரர்களும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். உங்கள் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் உங்களுக்கு அதிகரிக்கும். மற்ற செலவுகளும் உங்கள் பாக்கெட்டைப் பதம் பார்க்கும். எனவே உங்களுக்கு எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், எல்லாமே வீணாகப் போகும்.அரசியல்வாதிகளின் உழைப்பும மேலதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் போகும். கணவன்-மனைவிக்கிடையே உள்ள உறவு சிறப்படையும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.
^^^^^^^^^^^^^^^^^^^