19.12.2021 முதல் 25.12.2021 வரையிலான வார ராசி பலன்:
மேஷம்:
இந்த வாரம் ஒருசில கிரகங்கள் உங்களுக்கு துணை புரியும்.வாழ்க்கைத் துணைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். அதனால், குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். தொழில், வியாபார வளர்ச்சி சராசரியாக இருக்கும்.ளவான பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் புதிய தொழில் நுணுக்கம் பின்பற்றி, பணிச்சுமையை ஓரளவு குறைத்துக்கொள்வர். உங்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே நன்மைகளின் அளவு குறையாமல் கிடைக்கும். குடும்பத்திற்கான பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். அதனால், பணக்கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். உங்களிடம் பொறாமை குணம் உள்ள ஒருவர், உங்களுக்கு உதவுவதுபோல் நடித்து, உங்களுக்கு இடையூறு உருவாக்குவார். கவனம் தேவை. பெண்கள் சிகக்னம் பின்பற்றுவதால், பணக்கடன் பெறுவதைத் தவிர்க்கலாம். புத்திரர் தகுதி திறமை வளர்த்து படிப்பு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புதியவரை நண்பராக ஏற்பதில் நிதான அணுகுமுறை பின்பற்றவும்.
ரிஷபம்:
பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். இல்லறத்துணை கருத்தொற்றுமையுடன் நடந்து, மகிழ்ச்சிகர வாழ்வை உருவாக்குவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து கூடுதல் லாப விகிதம் பெற முடியும். பணியாளர்கள் சிறப்பாகப் பணி புரி து கூடுதல் சலுகைகள் பெறுவர். வாழ்வில் கூடுதல் வளம் பெற தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி ஆலோசனை கிடைக்கும். கடவுள் அருள் நிறைந்து கிடைக்கும். உங்கள் செயல்கள் சிறப்புற இறவனருள் துணை நிற்கும். வீடு வாகனத்தில் விரும்பிய மாறுதல் செய்வீர்கள். பெண்கள் கணவரின் அன்பு பாசம் சீராகக் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பதில் உள்ள இடையூறை சரி செய்து அதிக மதிப்பெண் பெறுவர்.
மிதுனம்:
பெரும்பாலான கிரகங்கள் நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது. இதனால், மனம் செயலில் புதிய உற்சாகம் உண்டாகும். அக்கம் பக்கத்தவரிடம் கருணை மனதுடன் பேசி நல் அன்பை வளர்ப்பீர்கள். இல்லறத்துணை உங்கள் மேலான குணங்களை உறவினரிடம் பேசிப் பெருமையடைவர். இளைய சகோதரர் முன்னேற மனமுவந்து உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் ஆதாய பண வரவும் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றி, நிர்வாகத்தின் நன்மதிப்பையும் சலுகைப் பயன்களையும் பெறுவர். புதிய வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேற அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்திலிருந்து கிடைக்கிற வருமானம் அதிகரிக்கும். எதிரியினால் தொந்தரவு வராத சுமுக சூழ்நிலை உருவாகும். குடும்பப் பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வர். பண வசதிக்கேற்ப புத்தாடை அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு படிப்புக்கான பண வசதி திருப்திகர அளவில் கிடைக்கும்.
கடகம்:
கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றன. தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் அக்கறை, கண்காணிப்பு தேவைப்படும். பணியாளர்களில் சிலர், நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மீறுவதால், தண்டணைக்குள்ளாக நேரும். நற்பெய்ரைக் கெடுத்துக்கொள்வதையும் தவிர்க்க இயலாது. இல்லறத் துணை ஆறுதல் மனப் பாங்குடன் உங்களுக்கான உதவியை வழங்குவார். தற்சமயம் உங்களை மதிப்புடன் நடத்துகிறவர்கள் கூட குறை சொல்கிற மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். கூடுதல் அளவில் பொறுமையைப் பின்பற்றி, நேர்மையுடன் நடந்துகொண்டால் மட்டுமே சங்கடங்களிலிருந்து தபபிக்க முடியும். உடல் நலம் கொஞ்சம் சீர்கெடலாம். உங்கள் அன்றாடப் பணிகள் தடைப்படாமல் இருக்க, உடல்நலத்தில் அக்கறை தேவை. வாகனம் ஓட்டும்போது வேகம் கூடாது. புத்திரரை நல்வழிப்படுத்துவதில் இதமான அணுகுமுறை நல்லது. குடும்பப் பெண்கள் சேமிப்பை கணவருக்குத் தந்து உதவுவர். மாணவரகள் படிப்பில் கவனம் குறையும். வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பு பின்னடையாமல் இருக்கும்.
சிம்மம்:
பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக சஞ்சரிக்கின்றன. வீடு வாகனத்தில் நம்பகக் குறைவானவர்களுக்கு இடம் கொடுப்பதைத் தவிர்க்கவும். புத்திரர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பீர்கள். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து, முக்கியமான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத் தேவைகளுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். நீண்டகாலக் கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் உறவினர்கள் உங்கள் அருமைபெருமைகளை உணர்ந்து கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பு சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். குடும்பப் பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து உறவினர்களை மகிழ்விப்பர், மாணவர்கள சாகச விளையாட்டுக்களைத் தவிர்க்கவேண்டும்.
கன்னி:
இந்த வாரம் சில கிரகங்களின் சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால், தேவையற்ற செலவுகளைக் தவிர்த்தால் மட்டுமே நீங்கள் பணக்கடன் பெறுவதிலிருந்து தப்பிக்கலாம். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்கு இப்போது எல்லா இடங்களிலும் மதிப்பு இருக்காது. எனவே உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருக்கும் இடங்களில் மட்டும் நீங்கள் வாயைத் திறப்பது நல்லது. வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவதால், பயண முறை எளிதாகும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. உடல்நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். உங்கள் வாழ்க்கைத் துணை குடும்ப பாசத்துடன் நடந்துகொள்வார். தொழிலில் அளவான மூலதனமும் அதிகமான உழைப்பும் தேவைப்படும். பணியாளர்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, பணி இலக்கை முடிப்பர். பெண்கள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.
துலாம்:
இந்த வாரம் உங்களுக்கு கிரக சஞ்சாரங்கள் நல்ல நிலையில் உள்ளன. இனிய எண்ணங்கள் மனதில் உருவாகி செயல்களை நிறைவேற்ற புதிய உற்சாகம் கிடைக்கும். இளைய சகோதரர் வழியில் மங்கல நிகழ்ச்சி நடத்த சாதகமான சூழ்நிலை உருவாகும். உறவினர்களிடமிருந்து கூடுதல் அன்பு பாசம் கிடைக்கும். பூர்வீக சொத்திலிருந்து பணப் பலன்கள் கிடைக்கும். எதிரிகளால் உருவாகும் தொல்லையை உங்கள் சாமர்த்தியத்தால் சரி செய்வீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்து குடும்ப வாழ்வைப் பெருமைக்குரியதாக ஆக்குவர். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற புதிய மாற்றங்களைப் பின்பற்றுவீர்கள். உபரி பண வரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து , நல்ல முறையில் தேர்ச்சி பெறுவர்.
விருச்சிகம்;
கிரக சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆன்மீக நம்பிக்கைகளை மனதில் வளர்த்து, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இதுவரை சில விஷயங்களில் உங்களுக்கு இருந்துவந்த சந்தேகம் நீங்கும். தம்பி தங்கைகளின் கருத்துக்கு மாறுபட்டுப் பேச வேண்டாம். வாழ்க்கைத் துணை குடும்ப நலன் சிறக்க தம்மால் ஆன பணிகளை மேற்கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்பும் கூடுதல் வருமானமும் பெறுவர். வாகன பராமரிப்புப் பணி தேவைப்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கவனித்து அவர்களின் செயல் சிறக்க உதவுவீர்கள். எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். பெண்கள் வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து ,அதிக மதிப்பெண் பெறுவர்.
தனுசு:
இந்த வாரம் கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வாழ்க்கைத் துணையின் மனக் குறையை அக்கறையுடன் சரி செய்வதால், குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். பிள்ளைகளின் கவனக் குறைவை இதமுடன் சரி செய்வீர்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமைந்து, வாழ்வில் கூடுதல் வளம் பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கும். சமயோசிதமாகப் பேசி உறவினர் நண்பர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வீடு ,வாகனத்தின் மூல்ம் கூடுதல் வசதி பெற சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி பண வரவைத் தரும். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வாழ்வியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உதவும் மனப்பாங்குடன் பேசுவது ஒற்றுமையைப் பாதுகாக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியர் ,பெற்றோரிடம் நன்மதிப்பு பெறுவர்.
மகரம்:
இந்த வாரம் சில கிரகங்கள் உங்களுக்கு சாதக்மாக இல்லை. அதனால், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் சுணக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. கவனச் சிதறல் இல்லாமல் பணியாற்றினால் மட்டுமே பெறுகிற நன்மையின் அளவு ஓரளவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஜாதக பலன் சில எதிர்பாராத நன்மைகளைப் பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையின் கூடுதல் அன்பும் பாசமும் மனதை நெகிழ வைக்கும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அளவாக இருக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். சாந்த குணம் கொண்ட உங்களை சிலர் பரிகாசம் செய்வர். அவர்களை விட்டு விலகுவது நல்லது. வாகானத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் குடும்ப நலன் சிறக்க தம்மால் இயன்ற பணிகளை மேற்கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும்.
கும்பம்:
கிரகங்கள் அனுகூலமாக அமைந்து அளவற்ற நன்மைகளை வாரி வழங்குகின்றனர். வாழ்வில் பலகாலம் திட்டமிட்ட செயல் ஒன்றை இப்போது தொடங்குவீர்கள். நணபர்களின் உதவி கிடைக்கும். சாமர்த்தியமாக பணிபுரிந்து அதிக நன்மை பெறுவீர்கள். சிலருக்கு வீடு வாங்குகிற திட்டம் இனிதே நிறவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான பாதுகாப்பை உருவாக்குவீர்கள். வாழ்க்கைத் துணை உங்களின் நல்ல குணத்தை மனரதாரப் பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிக்க புதிய இயந்திரங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கௌரவம் வழங்கும் வகையில் புதிய பதவிகளும் பொறுப்பும் வந்து சேரும். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் பெறுவர். பண வசதிக்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் ஒளிவிட்டுப் பிரகாசித்து பெற்றோரிடம் பரிசுப் பொருள் கேட்ட்டுப் பெறுவர்.
மீனம்:
சில கிரகங்கள் சாதகமற்ற வகையில் செயல்படுகின்றன.இதனால் இனம் புரியாத குழப்பத்தில் தடுமாறுவீர்கள். அடுத்தவர் கூறும் பொல்லாங்குப் பேச்சுக்களுக்கு மதிப்பளிக்கவேண்டாம். நீங்கள் பெற்ற பணக்கடன் உங்களை நெருக்கும். அந்த சமயத்தில், குடும்பஉறுப்பினர் உதவியாக இருப்பர். வீடு,வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறையைப் பின்பற்றவும். பிள்ளைகள் உங்கள் நண்பர்களிடம் வருத்தம் கொள்வர். உங்களின் ஆலோசனை அவர்களை வழி நடத்தும். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும். வாழ்க்கைத் துணையின் நம்பிக்கைக்கு குறைவு வராமல் நடப்பது குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் தாமத கதியில் இருந்தாலும் பண வரவு சீரான அளவில் இருக்கும். பணியாளர்கள் பணியிட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பணியாற்றுவது நல்லது. குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமின்றி யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் நணபர்களை விமர்சிக்க வேண்டாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ விரிவான ஜாதக பலன்களை ரூ. 950/- செலுத்தி தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்.]
*********************************************************