Oct 082022
 

வார ராசி பலன்- 9.10.2022 முதல் 15.10.2022 வரை:


மேஷம்:
கடந்தகால நற்செயல்களினால், மனதில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். புதிய பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர் சிறு அளவில் உதவி கேட்பர். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரர் உடல்நலம் பெற சத்தான உணவு தருவீர்கள். எதிரியின் தொந்தரவு அணுகாது. சுமுக வாழ்வு பெறுவீர்கள். இல்லறத்துணையின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் நிதானித்துப் பேசுவது அவர்களுடனான நட்பைப் பாதுகாக்க உதவும். குடும்பப் பெண்கள் சிறு செவுகளுக்கு சேமிப்பு பணத்தைப் பயன்படுத்துவர். மாணவர்கள் நன்றாகப் படித்து பாராட்டு பெறுவர்.
ரிஷபம்:
உங்களிடம் அன்பு பாராட்டும் உறவினர்கள் , தங்கள் இல்லத்தின் சுப நிகழ்ச்சிக்கு உங்களை அழைப்பர். குடும்பத் தேவைகளை தாராள பணச் செலவில் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது அவசியம். புத்திரரின் கவனக்குறைவை சரி செய்வதில் இதமான அணுகுமுறை அவசியம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்கும் யோகம் கூடிவரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லறத்துணையின் அன்பு பாசத்தினால், மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரி பண வரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதைக் குறைப்பதால், படிப்பில் சிறந்து விளங்க முடியும்.
மிதுனம்:
மனதில் உருவாகிற சஞ்சலத்தை நிவர்த்தி செய்து, பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். உங்களுடைய அனுபவ அறிவு, புதிய செயல் நிறைவேற துணை நின்று உதவும். ஊக்கம் உற்சாகமும் கொள்வீர்கள். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி பெற பல மாற்றங்களைச் செய்வீர்கள். பிள்ளைகள் தங்கள் நற்செயல்களால் உங்களுக்கு பெருமை தேடித் தருவர். சிலரது எதிர்ப்புகளை சமயோசிதமாக முறியடிப்பீர்கள். இல்லறத்துணையுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். தொழிலில் உறபத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுகிற நன்மை உண்டு. பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க,கணவருக்கு நல் ஆலோசனை வழங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செலல்க்கூடாது.
கடகம்:
உங்கள் மனதில் திடமான சிந்தனையும், செயலில் அதிக நன்மையும் ஏற்படும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் படிப்பில் முன்னேற்றம் பெற, மாற்று ஏற்பாடு செய்வீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற மந்த நிலைமையை ஓரளவு சரி செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றவேண்டும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்க உதவும்.மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.
.
சிம்மம்:
உறவினர்களுக்கு உங்கள் மீதிருந்த கருத்துவேறுபாட்டை சரி செய்வீர்கள். வெளியூர்ப் பயணம் சில நன்மைகளைப் பெற்றுத் தரும். சமூக நிகழ்வுகளினால், புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால், பயண முறை எளிதாகும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும். இல்லறத்துணை மற்றும் அறிமுகமில்லாதவர்களிடம் நிதானித்துப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பணியாளர்களுக்குத் தேவையான சலுகைப் பயன் எளிய முறையினால் பெற அனுகூலம் உண்டு. பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.
கன்னி:
உறவினர்களும் நண்பர்களும் உங்களிடம் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்விர்கள். கூடுதல் பண வரவு கிடைக்க புதிய வாய்ப்பு உருவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். சொத்து விஷயத்தில் கிடைக்கிற பண வரவு அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபிவிருத்தி பெற வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை பெற அனுகூலம் உண்டு. பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் தகுதி, திறமை வளர்ப்பதில் முயற்சி எடுப்பர்.
துலாம்:
வாழ்வில் நெருக்குதல் கொடுத்துவந்த சில சிரமங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும். உடன் பிறந்தவரின் நல் அன்பு, பாசம் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திரர் உடல்நலத்தில் தகுந்த கவனம் வேண்டும்.பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற , கூடுதல் முயற்சி, உழைப்பு உதவும். பணியாளர்கள் பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். குடும்பப் பெண்கள் விதவிதமான உணவு தயாரித்து, உறவினர்களை உபசரிப்பர்.மாணவர்கள் நண்பர்களின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்வர்.
விருச்சிகம்:
முக்கியமான செயல் ஒன்று நிறைவேற தாமதம் இருக்கும். அதனை புதிய அணுகுமுறையால், சரி செய்வீர்கள். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தரவேண்டாம். புத்திரரின் படிப்பும் நற்செயலும் உங்கள் மனதில் நமபிக்கையை உருவாக்கும். சத்து நிறைந்த காலம் தவறாத உணவு, உடல் நலம் பாதுகாக்கும்.இல்லறத்துணை உங்கள் சாந்த குணம் நிறைந்த மனதைப் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஓய்வைப் பின்பற்றுவதால், உடல்நலத்தைப் பாதுகாக்க இயலும். பெண்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற சிறப்பு பூஜைகள் செய்வர். மாணவர்கள் அதிக விலை மதிப்புள்ள பொருடகளை கவனமுடன் பாதுகாகக் வேண்டும்.
தனுசு:
உங்கள் பேச்சில் வசீகரமும், தனித்துவமும் கலந்திருக்கும். சமூகப் பணியிலும் ஈடுபாடு கொள்வீர்கள். உறவினர் வருகையால் வீட்டில், மகிழ்ச்சி நிலவும். புத்திரர் தன் நணப்ரிடம் மனக் கிலேசம் வராத அளவில் பழக ஆலோசனை கூறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சந்தைப் போட்டியை ஓரளவு சமாளிப்பிர்கள். பணியாளர்கள் இடமாற்ற்ம், ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை எதிர்கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, சீரான பண வசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் புதிய பயிற்சியினால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
மகரம்:
வாழ்வில் செல்வ வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். வாகன வசதி திருப்திகர அளவில் பயன் தரும். புத்திரர் படிப்பில் மேன்மை அடைவர். எதிரி உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்ள புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணையுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலவும் மந்த நிலையை சரிசெய்ய மாற்று வழிமுறையைப் பின்பற்றுவீர்கள். உத்தியோகஸ்தர் பணியாளர்களுடன் அணுசரணையாக நடந்து , உற்பத்தி அளவை அதிகரிப்பர். குடும்பப் பெண்கள் ஆரோக்கியம் சீராக அமைந்து பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ப்பதால், எதிர்பார்த்த தேர்ச்சிவிகிதம் பெறலாம்.
கும்பம்:
திட்டமிட்ட பணியை எளிதாக செயல்படுத்தி , அதிக நன்மை பெறுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொள்வர். தாமதமான செயல் நிறைவேற புதிய வாய்ப்பு, உதவி கிடைக்கும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. புத்திரர் அறிவாற்றலில் சிறந்து விளங்குவர். வாழ்வியல் நடைமுறை சாதகமாக இருக்கும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம் கிடைத்து மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமாக செழித்து வளரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் உறவினர் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடத்த உறுதுணை புரிவார்கள். மாணவர்களின் படிப்பில் அதிக தேர்ச்சிவிகிதம் பெறுவார்கள். பெற்றோரிடம் வேண்டிய பரிசுப் பொருள் பெறுவர்.
மீனம்:
எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. உடன் பிறந்தவர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறையைத் தவறாமல் பின்பற்றவேண்டும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். உடல்நலம் சீர்பெற மருத்துவ சிகிச்சை ஓய்வு தேவைப்படும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வார். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள் நற்பெயரை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை வேண்டும். குடும்பப் பெண்கள் , சேம்பிப்பு பணத்தை சிறு செலவுகளுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் விளையாட்டில் உரிய பாதுகாப்புடன் ஈடுபடுவது நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய முழுப் பலனை ரூ. 950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், ‘moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டுக்கு தொடர்பு கொள்ளவும்]
&******************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)