Apr 102022
 

10.4.2022 முதல் 16.4.2022 வரையிலான வார ராசி பலன்:

மேஷம்:
கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குல தெய்வ அருளால் வாழ்வில் கூடுதல் வளங்களைப் பெற முடியும். எதிரி உங்கள் வழியிலிருந்து விலகுவார். வாழ்க்கைத் துணை மனதில் உங்கள்மீது நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் பெறுகிற அனுகூலத் தன்மைகளை அக்கறையுடன் பாதுகாத்துக்கொள்வீர்கள். அமைதியான குணத்தோடு, இனிய நல் வார்த்தைகளைப் பேசி, நண்பர்களிடம் சில நன்மை பெறுவீர்கள். வீடு வாகன வசதிகள் உங்களுக்கு தாராளமாகக் கிடைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு ,சலுகைப்பயன் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல் அன்பு, சீரான பண வசதி கிடைத்து , சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து தேர்வில் நல்ல தேர்ச்சி விகிதம் காண்பர்.
ரிஷபம்:
சாதகமான கிரக சஞ்சாரம் உள்ளது. ஆன்மீகக் கருத்துக்களை அன்புக்குரியவர்களிடம் பேசுவீர்கள். உங்கள் செயல்களிலும், மன சிந்தனைகளிலும் புத்துணர்ச்சி குடிகொள்ளும். உங்கள் வாழ்வையும் வளமாக்கி, உங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வையும் வளமாக்கிக்கொள்வீர்கள்.அறிமுகம் இல்லாதவர்கள் உங்களைப் புகழ்ந்து பேச இடமளிப்பதும் ,அந்த புகழ்ச்சியில் ஏமாறுவதும் நல்லதல்ல; முற்றிலும் தவிர்க்கவும். புத்திரர் திட்டமுடன் படித்து பெருமை தேடித் தருவர். உடல் நலம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் சுய கௌரவ எண்ணங்களால் சஞ்சலம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும், பண வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்கள் குடும்பச் செலவை தாராள மனதுடன் மேற்கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதிப்பதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சிறக்கும். மாணவர்கள் புதியவர்களிடம் பேசிப் பழகுவதற்கு நிதான அணுகுமுறையைப் பின்பபற்ற வேண்டும்.
மிதுனம்:
கிரக சஞ்சாரம் சாதகமற்றுக் காணப்படுகிறது. வீடு வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறை அவசியம். இல்லறத்துணை பொறுமையைக் கடைப்பிடித்தாலும்கூட உங்கள் மணம் முரண்பாடு கண்டு, கருத்து வேறுபாடுகளை வளர்க்கும். அறிமுகம் இல்லாத பெண்களிடம் பேசுவதிலும் பழகுவதிலும் நிதான அணுகுமுறை தேவை. பணவரவு கூடுதலாகும் வண்ணம் வருகிற ஒவ்வொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பின்பற்றுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தரக்கேட்டு பிடிவாதம் செய்வர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, பணி இலக்கை அடைவர். பெண்கள் கணவரின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கவேண்டாம். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் அறிவுரையை மதித்து நடப்பது நல்லது.

கடகம்:
இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கின்றன. கூடுதல் பண வரவில் குடும்பத் தேவைகளை தாராள மனதுடன் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் நற்செயலால், சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெற்று புதிய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். எதிரியால் வரும் தொந்தரவை சமயோசிதமாக சரி செய்வீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம் மனதை நெகிழ வைக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். வீடு, வாகன பயணத்தில் உரிய கவனம் தேவை. புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் நிதானித்துப் பேசுவது நல்லது. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். மாணவர்கள் படிப்பிற்குத் தேவையான பொருட்களை வாங்குவர்.

சிம்மம்:
கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. வீடு வாகனத்தில் கூடுதல் வசதி பெற , சிறு அளவில் அபிவிருத்திப்பணி புரிவீர்கள். புத்திரர்கள் நண்பர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு முன்னேற்றப்பாதைக்கு அடிகோலுவர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். கடந்த காலத்தில் உங்களுக்கு இடையூறு செய்தவர்களை கண்டிக்கும் மனப்பாங்கு ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடித்தால், எதிர்கால நன்மைகளை எளிதில் பெறலாம். பணக் கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் மீது அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து கூடுதல் லாபம் பெற முடியும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் உறவினர்களை உபசரித்து நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சியில் அத்க கவனமுடன் ஈடுபடவேண்டும்.

கன்னி:
கிரகங்கள் சாதகமற்று காணப்படுகின்றன. உடம்புக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்பதால், சீலருக்கு ஆரோக்கியம் குன்றும். தொழிலில் அபிவிருத்திப்பணிகளை சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து மேற்கொள்வது நல்லது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பதால், அவப்பெயரிலிருந்து தப்பலாம். உங்களுக்கு மதிப்பு, மரியாதை தருபவர்களிடம் மட்டுமே பொது விஷயங்களைப் பற்றிப் பேசலாம். குடும்பத் தேவைகளுக்கு செலவு செய்ய வேண்டும்போது சிக்கனத்தைக் கடைப்படிப்பது நல்லது. சகோதரியின் உதவியினால் சில நன்மைகள் பெறுவீர்கள். குடும்பப் பெண்கள் கனவரின் நல்ல குணம் , செயலைப் போற்றி மகிழ்வர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால், திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறுவர்.
பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
துலாம்:
கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குடும்பத்தில் மங்கல நிகழ்வு, மகிழ்ச்சி ஏறப்டும். தாராளமாக செலவு செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் கூடுதல் அன்பு, பாசம் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்த அறிவுரையை இதமான முறயால் சொல்லி, நல்வழீப்படுத்துவீர்கள். எதிரியால் வரும் தொல்லை பலமிழந்து போகும். இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க தேவையான ஆலோசனை வழங்குவார். தொழிலில் உற்பத்தி, விறபனை அதிகரித்து லாப விகிதம் கூடும். தொழில் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வாங்குவீர்கள். அவை உங்களுக்கு நற்பலன் தருவதாகவும் அமையும். தொழில் உபகரணம் கூடுதலாக வாங்க அனுகூலம் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள் பிற நிகழ்ச்சிகளில் மனதை அலைய விடாமல் படிப்பதால் படிப்பில் கவனம் வளரும்.
விருச்சிகம்:
இந்த வாரம் கிரகங்கள் சாதகமாக உள்ளன. வாழ்வில் குறுக்கிடும் எதிர்ப்புகளை சமயோசித புத்தியால் சரி செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதகுணத்துடன் நடந்துகொள்வர். சீரான ஓய்வும், மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். இலல்றத்துணை கருத்து ஒற்றுமையுடன் . உங்கள் எண்ணங்களில் புதுமையும் செயல்களில் நேர்த்தியும் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இளைய சகோதரர் கருத்துகளை மறுத்துப் பேச வேண்டாம். தொழில், வ்யாபாரத்தில் உபரி பண வரவு இருக்கும். அரசுப் பணியாளர் பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் பெற அனுகூலம் உண்டு. குடும்பப் பெண்கள் உறவினர்களை நன்கு உபசரித்து, நற்பெயர் பெறுவர். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்தால் மட்டுமே, தேர்ச்சி விகிதம் சீராகும்.
தனுசு:
இந்த வாரம் கிரக சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உங்கள் எண்ணங்கள் எளிதாக ஈடேறும். பிள்ளைகள் மனதில் உருவாகும் சஞ்சலங்களை கூடுதல் அன்பு பாராட்டி சரி செய்வீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும். இல்லறத்திஉண விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அக்கம் பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவர். சிலருக்கு புத்ய வீடு வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி தாராள பணச்செலவில் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படும். பெண்கள் குடும்ப பண வசதிக்கேற்ப புதிய ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து அதிக தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மகரம்:
கிரக சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வாழ்வில் மிகுந்த நன்மை பெற வழியுண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வும் குதூகலமும் ஏற்படும். சமூகத்தில் பெற்ற அந்தஸ்தை வளர்த்துக்கொள்வீர்கள். வாகன பயன்பாடு திருப்தியான அளவில் இருக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். பிள்ளைகள் கூடுதல் அறிவு, திறமைகளுடன் செயல்படுவர். எதிரியால் வருகிற கெடு செயல் பலமிழந்து போகும். தொழிலில் சில மாற்றம் பின்பற்றி எதிர்பார்த்த நன்மை பெறுவீர்கள். பணியாளர் பணித் திறன் வளர்த்து நன்மதிப்பு, சலுகைப் பயன் எளிதில் பெறுவர். . குடும்பப் பெண்கள் , பிள்ளைகளின் நலன் சிறக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்வர். மாணவர்கள் படிப்பில் கவனமும் விளையாட்டுகளில் நிதானமும் பின்பற்றுவது அவசியம்.
கும்பம்:
கிரக சஞ்சாரம் சராசரி நிலையில் உள்ளது.பிள்ளைகளின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். சான்றோர்களின் ஆசியும் உதவியும் கிடைக்கும். மனதில் ஆன்மீக நற்சிந்தனை வளரும்.சான்றோர்களின் ஆசியும் உதவியும் கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பில் பணச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் மருத்துவ சிகிச்சையால் முன்னேற்றம் பெறும். இல்லறத்துணையின் கருத்துக்களை சுய கௌரவம் கருதி விமர்சிப்பீர்கள். அது குடும்ப ஒற்றுமையைப் பாதிக்கும் தொழிலில் சராசரி நிலையை அடைய கூடுதல் மூலதனமும் உழைப்பும் தேவைப்படும். பணியாளர்கள் தொழிலில் புதிய யுக்தியைக் கையாள்வதால், இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள். பெண்கள் தங்கள் உறவினரின் குடும்ப விவகாரத்தை கணவரிடம் பேச வேண்டாம். மாணவர்கள் தேவை நிறைவேற தாமதம் ஆவதால், மனதில் சஞ்சலம் கொள்வர்.
மீனம்:;
கிரக சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. தொழில் வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி, வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உத்தியோகஸ்தர் பணியாளர்களை ஊக்கப்படுத்தி, திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர். இல்லறத்துணை வழி உறவினர்கள் உங்களின் அருமைபெருமை நிறைந்த குணத்தைப் பாராட்டுவர். குடும்பத்திறகுத் தேவையான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். உடன்பிறந்தவர் ஆதரவாக நடந்துகொள்வர். வாகன பயணம் இனிதாக அமையும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். எதிரியால் தொந்தரவு அணுகாத சுமுகமான நிலை இருக்கும். நிலுவைப் பணம் சிறு முயற்சியினால் வந்து சேரும். பெண்கள் கணவரின் எண்ணங்களுக்கு உர்ய செயல் வடிவம் கொடுத்து கணவரின் பெருமையை உயர்த்துவர். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரிய்ர் பெற்றோரின் ஆதரவைப் பெறுவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் முழு ஜாதகப் பலனை ரூ .950/- செலுத்தி, தெரிந்துகொள்ள moonramkonam@gmai.comஎன்ற வெப்சைட்டிற்கு தொடர்புகொள்ளவும்]
*************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)