18.9.2022 முதல் 24.9.2022 வரையிலான் வார ராசி பலன்:
மேஷம்:
இந்த வாரம் சுமாரான பலன்களைத் தரும். கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரம் மன வேதனையையும், உங்கள் செயல்களில் தாமதத்தையும் ஏற்படுத்தும். அறிமுகம் இல்லாதவகள் மூலம் தொல்லைகள் உண்டாகலாம். அவர்களிடம் நிதானித்துப் பேசுவது நல்லது. குடும்பத் தேவைகளுக்கான பணத் தேவை அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பிள்ளைகளின் நடவடிக்கைகலைக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். உங்கள் உடல்நலத்தில் அக்கறை தேவை. சீரான ஓய்வும், நேரத்துக்கு உணவும் அவசியம். இல்லறத்துணை ஒற்றுமையுடன் இருந்து, குடும்பநலம் பேணுவார். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து, ந்டப்பது நல்லது. குடும்பப் பெண்கள் சேமிப்பு பணத்தை கணவரின் அவசரத் தேவைகளுக்குத் தந்து உதவுவார். மாணவர்கள் தேர்ச்சிபெற மிகவும் கடுமையான பயிற்சி அவசியம்.
ரிஷபம்:
இது நலம் தரும் வாரம்: உங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தவர்களும் இப்போது வலிய வந்து உறவாடுவர். வாகனத்தில் பராமரிப்பு பணிகளைச் செய்வீர்கள். குடும்பச் செலவுக்கான பண வசதி தாராளமாக இருக்கும். எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களிடமிருந்து விலகிநின்றால், கருத்துவேறுபாடுகளைத் தவிர்க்கலாம். பிள்ளைகள் உங்கள்மீது அளவுகடந்த பாசம் காட்டுவர். இதுவரை இருந்துவந்த பிணக்குகள் தீரும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உற்பத்தி அதிகரிப்பு அதிக விற்பனை என்று தொழில் அமோகமாகப் போகக்கூடிய நேரம் இது. சாதாரண பணிக்குக்கூட பணியாளர்கள் அதிக சலுகைகளை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இஷ்ட தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப நலன் சிறக்க உதவுவர். மாணவர்கள் சிறப்புடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.
மிதுனம் :
உங்களுக்கு இது நல்ல வாரம். புத்திரர்களின் எதிர்கால நலன் சிறக்க சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் சிலருக்கு நிறைவேறும். கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் படுத்திக்கொண்டு ஆதாய பண வரவைப் பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவர்களிடம் இருந்துவந்த மனக் கிலேசம் விலகும். அதனால், உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இல்லறத்துணை உங்களுடைய நற்செயல்களைப் பாராட்டுவர். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி பெருகும். எதிரியிடமிருந்து விலகுவதால், சொந்தப்பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்படாமல் இருக்க, கவனத்துடன் பணிபுரிய வேண்டும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம்.
கடகம்:
இது சுமாரான வாரம். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், சம்பந்தமில்லாதாத வேலைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நேரும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். இல்லறத்துணையுடன் பொறுமையுடன் குடும்ப நல்னை அக்கறையுடன் கவனிப்பார். உடன் பிறந்தவர்கலின் உதவி கிடைத்து தெம்பு தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சராசரி இலக்கை அடைய மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் பணி இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பப் பெண்கள் உறவினர்களை உபசரிப்பர். மாணவர்கள் வெளியே சுற்றுவதைக் குறைத்தால் மட்டுமே படிப்பில் தேர்ச்சியடைய முடியும்.
சிம்மம்:
இது உங்களுக்கு அனுகூலமான வாரம். மற்றவர் கூறும் அவதூறு வார்த்தைகளை அலட்சியம் செய்து ஒதுக்கிவிட்டு உங்கள் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நீதி நேர்மையான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு, வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். புத்திரர்களின் வார்த்தைகளை வேதம்போல மதித்து நட்ப்பீர்கள். எதிரியால் வரும் கெடு செயலை முறியடித்திடுவீர்கள். இளைய சகோதரர் வழியில் மங்கல நிகழ்ச்சியை நடத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் பணி சிறக்க நல்ல ஆலோசனை கூறுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி புரிந்து கூடுதல் லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எளிய முயற்சியால், அதிக சலுகைப் பயன்கள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கும் யோகமுண்டு. மாணவர்கள் படிப்பில் கவனமும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வதும் அவசியம்.
சந்திராஷ்டமம்:
25.8.13 பகல் 12.07 மணி வரை உள்ளது. இந்த சமயத்தில் வீண் வாக்குவாதங்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதும் வேண்டாம்.
கன்னி:
இது சுமாரான மாதம். குடும்பத்தில் புதிய செலவினங்கள் உருவாகி, ஒரு நெருக்கடியான பணத் தேவை ஏற்படும். உங்கள் சேமிப்புப் பணத்தை செலவு செய்தும், பணக்கடன் பெற்றும் இந்த பண நெருக்கடியை சமாளிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் பேசும்போது சூழ்நிலை உணர்ந்து பேசுவது அவசியம். அப்போதுதான் உங்கள் நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரரின் குறைகளை சரிசெய்யும்போது இதமான அணுகுமுறையைப் பின்பற்றவும். விவகாரங்களில் சுமுகத் தீர்வு காண காலதாமதமாகும். இல்லறத்துணை குடும்ப சிரமங்களை சரி செய்வதில் உங்களுக்கு உதவியாக இருப்பார். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விறபனையின் அளவை சரிசெய்வீர்கள். பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் விதவிதமான உணவு தயார் செய்து குடும்ப உறுப்பினர்களை உபசரிப்பர். மாணவர்கள் ,அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்:
25.8.13 பகல் 12.07 மணி முதல் 26.8.13 மற்றும் 27.8.13 இரவு 8.51 மணி வரை உள்ளது. இந்த நாட்களில் யாருடனும் வீண் வாக்குவாதங்களோ, புதிய முயற்சிகளோ வேண்டாம்.
துலாம்:
இது உங்களுக்கு நன்மை தரும் வாரம். மனதில் புதிய உத்வேகமும் பணிகளில் புதிய பரிமளிப்பும் உண்டாகும். கடந்த நாட்களில் நிறைவேற்றத் தாமதமான காரியங்களை புதிய வேகத்துடன் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் மங்கல நிகழ்ச்சி ந்டத்த அனுகூலம் உண்டு. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். பூர்வீக சொத்திலிருந்து வருமானம் நல்ல முறையில் இருக்கும். அந்த அளவுக்கு செலவுகளும் இருக்கும். பிள்ளைகளின் படிப்புக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வீர்கள். உங்களுக்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தரும். தொழில் வியாபாரம் செழித்து வளர, கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கௌரவமான பதவி கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியர் பெற்றோரிடம் நற்பெயர் எடுப்பர்.
சந்திராஷ்டமம்:
27.8.13 இரவு 8.51 மணி முதல், 28.8.13 ; 29.8.13 மற்றும் 30.8.13 இரவு வரை உள்ளது. இந்த நாட்களில் யாருடனும் வீண் வாக்குவாதங்களும், புதிய முய்ற்சிகளும் வேண்டாம்.
விருச்சிகம்:
இது சுமாரான வாரம். பண வரவு அதிகம் பெற சிலர் ,உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். நேர்மை வழியில் நடந்து, வாழ்வு முறையை சரி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் கூடும். வீடு ,வாகனத்தில் அளவான பயன்பாட்டு வசதி கிடைக்கும். பிள்ளைகளைக் கண்டிப்பதில் நிதான அணுகுமுறை வேண்டும். நிர்ப்பந்தக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். இல்லறத்துணை புரிதல் திறன் குறைந்து உங்களுடன் சிறு சிறு சச்சரவில் ஈடுபடுவர். எதிர்வாதம் பேசுவதைக் குறைப்பதால், ஒற்றுமை சீராகும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை உரிய கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். பணியாளர்கள் குடும்பச் செலவை சரி செய்ய கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். குடும்பப் பெண்கள் ,கணவரைப்பற்றி, பிறர் சொல்லும் குறைகளின் உண்மை உணர்ந்து பேசுவது நல்லது. மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்:
31..8.13; முதல் 1.9.13 இரவு 7.19 மணி வரை உள்ளது. இந்த நாட்களில், வீண் வாக்குவாதங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
தனுசு:
இது மிக நல்ல வாரம். மனதில் மகிழ்ச்சி பெருகும். ஓய்வு நேரத்தைக் குறைத்து பணியில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். ஒரு முக்கியஸ்தரின் உதவி கிடைத்து, செயல் வ்ளிதாக நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உங்கள் பிள்ளைகள் தங்களுடைய நற்குண நற்செயல்களால்,உங்களுக்கு நற்பெயர் தேடித் தருவர். எதிரியிடமிருந்து விலகுவதால் நேரம் பணம் விரயமாகாமல் தப்பிக்கலாம். இல்லறத்துணையிடம் கருத்துவேறுபாடு வராமலும் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பங்கம் வராமலும் நடந்துகொள்ளவேண்டியது அவழியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சக பணி சார்ந்தவர்களின் கருத்துக்கு ,உரிய மரியாதை தருவது உங்களுக்கு ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். குடும்பப் பெண்கள் கணவருக்குத் தெரியாமல் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் படிப்பில் முழுக் கவனமும் செலுத்தி கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.
மகரம்:
இது சுமாரான வாரம். இதுவரை உங்களுக்கு வேண்டப்பட்டவராக இருந்தவர்களையும் நம்பகக் குறைவானவர்களாகக் கருதக்கூடிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் அதிக பண வரவு கிடைக்கும். புத்திரரின் படிப்புத் திறன் அதிகரித்து கவுரவத்தைப் பெற்றுத் தரும். இல்லறத்துணை உங்கள் கருத்துகளை மதித்து நடந்து குடும்ப நலனை பாதுகாத்திடுவர். தொழிலில் எதிர்வரும் இடையூறை தாமதமின்றி சரி செய்வதால், உற்பத்தியும் விற்பனையும் சீராக இருக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையை சூழ்நிலை உணர்ந்து துவங்குவது நல்லது. பெண்கள் தியாக மனப்பாங்குடன் குடும்பப் பணிகளை நிறைவேற்றுவர். மாணவர்கள் ஆன்மீக நம்பிக்கை வளர்ப்பதால், மனம் சலனமற்று இருக்கும்.
கும்பம்:
இது உங்களுக்கு அனுகூலமான வாரம். சமூகத்தில் பெற்ற நற்பெயர் நிலைத்து நிற்கும்படி பார்த்துக்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் அன்பு பாசம் அதிக அளவில் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாகனம் வாங்குகிற திட்டத்தை நிறைவேற்றுவர். பிள்ளைகள் படிப்பில் கவனமின்றி விளையாட்டுக் குணத்தோடு இருப்பதை உங்கள் இனிய அணுகுமுறையினால் திருத்துவீர்கள். எதிரியால் உருவாகிற தொந்திரவு விலகும். ஒவ்வாத உணவுகளால், உடல் ஆரோக்கியம் பாதிப்படையக்கூடும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதிற்கு சந்தோஷம் தரும். தொழிலில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப் பணி புரிவீர்கள் உற்பத்தி விற்பனை செழித்து லாப விகிதம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் கணவரின் அன்பு, தாராள பண வசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். மாணவர்கள் சிறபாகப் படித்து பெற்றோரிடம் பரிசுப் பொருள் கேட்டுப் பெறுவர்.
மீனம் :
இது சுமாரான வாரம். உங்களுக்கு அஷ்டம சனி நடப்பதைப் பற்றியே நீங்கள் எப்போதும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய பூர்வ ஜென்ம பலன் இப்போது உங்களுக்கு சில நற்பலன்களை வழங்கும். தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றக்கூடாது. புத்திரர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து நடந்துகொள்வர். ஒவ்வாத உணவு உட்கொள்வதால், உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். எதிரியின் கெடுசெயலை முறியடிக்க நீங்கள் மாற்று உபாயம் பின்பற்றவேண்டியிருக்கும். இல்லறத்துணை உங்கள் கருத்துகளை எதிர்மறையாகப் புரிந்துகொண்டு எதிர்வாதம் புரிவார். தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைத்தால் மட்டுமே சராசரி பணவரவு இருக்கும். பணியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உடபட நேரும். போதிய கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே, கடுமையான விளைவுகளைத் தடுத்துக்கொள்ள முடியும். பெண்கள் சீரான ஓய்வு எடுத்தால் உடல்நலம் காப்பாற்றப்படும். மாணவர்கள் ஊர் சுற்றுவதைக் குறைத்துக்கொண்டால், படிப்பில் கவனம் காட்ட முடியும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன்களை ரூ. 950/- செலுத்தி தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]
***********************************************************