Nov 202021
 

21.11.2021  முதல் 27.11.2021 வரை யிலான வார ராசி பலன் :

மேஷம்:
இந்த வாரம் நீங்கள் மற்றவர்களிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால், உங்கள் பேச்சு சிரமம் தவிர்க்க உதவும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். சுத்தமான உணவு வகைகள உண்பதால், உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்றலாம். வாழ்க்கைத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதிற்கு ஆறுதல் தரும். கடின உழைப்பினால், உற்பத்தியின் அளவை சராசரி நிலைக்கு கொண்டு வரலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றுவது அவசியம். பெண்கள் சேமிப்பு பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் தேர்ச்சி விகிதம் சீராகும்.
ரிஷபம்:
இதுவரை உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் இப்போது உங்களை விரும்பி வந்து அன்பு பாராட்டுவர். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். இளைய சகோதரருக்கு உதவி புரிவீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவேறும். புத்திரர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு படிப்பில் முன்னேற்றம் பெறுவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலை மாற்றம் பெறும். இல்லறத்துணையின் மனக்குறையை சரி செய்வதில் கவனம் கொள்வீர்கள். பணியாளர் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவீர்கள். பெண்கள் குடும்பநலன் சிறக்க கூடுதல் கவனம் கொள்வர். மாணவர்கள் திருப்திகர அளவில் படித்து பெற்றோரிடம் பர்சுப்பொருள் பெறுவர்.
மிதுனம்:
இந்த வாரம் உங்கள் இஷ்ட தெய்வத்தின் அருளால், எண்ணியது நிறைவேறும். கடன் தொல்லைகளில் சிக்கி விடாமல் இருக்க , செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும். வீடு வாகனங்களில் நம்பகக் குறைவானவர்களுக்கு இடம் தரவேண்டாம். புத்திரர்களின் குழப்பமான எண்ணங்களை இனிய அணுகுமுறை ,ஆலோசனைகளால் சரி செய்வீர்கள். சீரான ஓய்வு ,உடல்நலம் பதுகாக்கும் . இல்லறத்துணையின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம். தொழிலில் அளவான மூலதனம் ,அதிக உழைப்பு என்கிற தாரக மந்திரத்தை பின்பற்றுவது நஷ்டத்திலிருந்து காப்பாற்றும். மாணவர்கள் வெளியே சுற்றுவதைக் குறைத்துக்கொண்டால், படிப்பில் ஞாபகத் திறன் வளரும். பெண்கள் பணச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது.
கடகம்:
சில கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. சிறு விஷயங்களிலும் பதற்றமான மனதுடன் நடந்துகொள்வீர்கள். இதனால் சிரமும் கால விரயமும் ஏற்படலாம். அதிக விலையுள்ள பொருட்களை பயன்படுத்தும்போது, அந்த பொருட்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். வாகன பராமரிப்பு மேற்கொள்வதால், பயணங்கள் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். மகளின் ஜாதக யோக பலனால், உங்களுக்கு பூர்வ புண்ணிய நற்பலன்கள் ஏற்படும். எதிரியின் மனப்பாங்கு உணர்ந்து விலகுவீர்கள். இல்லறத்துணையின் ஆலோசனை உங்களை புதிய வழியில் செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் உருவாகும் இடையூறை தாமதமின்றி சரிசெய்வதால், உற்பத்தியும் விற்பனையும் சீராகும். பெண்கள் குழந்தைகளின் நலன் சிறக்க தேவையான பணிகளை மேற்கொள்வார்கள். மாணவர்கள் பெற்றோரின் எண்ணங்களை மதித்து நடந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
சிம்மம்:
மனதில் புத்துணர்வும் செயல்களில் பரிமளிப்பும் திறனும் உருவாகும். புதிய லட்சியங்களை ஆர்வத்துடன் நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் எதிர்மறையாக இருந்து வந்த சூழ்நிலை விலகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். புத்திரரின் படிப்புக்குத் தேவையான வசதிகளை செய்து தருவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். நிலுவை பணக் கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து, குடும்பப் பெருமையைக் காப்பாற்றுவர். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி புரிவீர்கள் .உத்தியோகஸ்தர் சிறப்பாகப் பணி புரிந்து பாராட்டு வெகுமதி பெறுவர். பெண்கள் உறவினர்களின் கூடுதல் அன்பு பாசம் பெறுவர். மாணவர்கள் விளையாட்டுகளில் சாகசம் கூடாது.
கன்னி:
நண்பர்களின் விமர்சனங்களை ஆலோசனைகளாகக் கருதுவதால், வாழ்க்கையில் புதிய படிப்பினைகளும் புதிய நன்மைகளும் வந்து சேரும். குடும்பத் தேவைகளுக்கான பணச் செலவு அதிகரிக்கும். சிறு அளவில் பணக்கடன் பெறுவீர்கள். புதிய நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். வீடு வாகனப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரைக் கண்டித்து நல்வழிப்படுத்துவதில் நிதான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும். இல்லறத்துணை உதவும் மனப்பாங்குடன் நடந்துகொள்வர். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் அமையப் பெறுவர். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை மதித்து ந்டப்பது நற்பலனைத் தரும்.
துலாம்:
உறவினர்களிடம் உங்கள்மீது உள்ள அதிருப்தி எண்ணம் மாறும் வகையில் நடந்துகொள்வீர்கள். உங்கள் பேச்சில் நியாய தர்மம் நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் போற்றி மக்ழும் வகையில் வசதிகளை அனுபவிப்பீர்கள். புத்திரரின் செயல் முறையை இனிய அணுகுமுறையால் சரி செய்வீர்கள். எதிர் மனப்பான்மையுடன் செயல்படுகிறவர்களின் செயலை மன உறுதியுடன் முறியடிப்பீர்கள். இல்லறத்துணையின் ஆலோசனை வாழ்வியல் நடைமுறையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகி உரிய பண வரவைத் தரும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் அதிக பண வரவும் கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பு , சீரான பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிகம்:
சுய கௌரவத்தப் பாதுகாக்கும் வகையில் செலவுகளில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். எவரிடமும் நிதானித்துப் பேசுவது நல்லது. வீடு வாகனத்தில் பொருட்கள் களவு போகாமல் பாதுகாத்துக்கொள்வது அவசியம். பிள்ளைகள் உடல்நலக் குறைவு மனச் சஞ்சலம் ஆகிய தொந்தரவை எதிர்கொள்வர். பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். இல்லறத்துணையின் அன்பு பாசம் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தும். தொழிலில் உருவாகிற நிர்ப்பந்தம் தாமதமின்றி சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராக அமையும். பணியாளர் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பப் பெண்கள் புத்தாடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் கூடுதல் பயிற்சி முறையால், சீரான தேர்ச்சி விகிதம் பெறுவர்.
தனுசு:
இந்த வாரம் நீங்கள் செய்யும் சிறு பணியும் நேர்த்தியாக அமைந்து அதிகபட்ச நன்மயைப் பெற்றுத் தரும். அக்கம்பக்கத்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். புதிதாக வீடு, வாகனம் வாங்க நல்ல யோகம் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை தாராள அளவில் பூர்த்தி செய்தாலும், சிறு மனக்குறை இருக்கும் ஒரு மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பரின் இல்ல விழாவில் கலந்துகொள்வீர்கள். இல்லறத்துணை ஒற்றுமை உணர்வுடன் குடும்பப் பணிகளை நிறைவேற்றுவார். தொழிலில் அபிவிருத்திப்பணி சிறப்பாக செய்வீர்கள். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிந்து நன்மதிப்பு சலுகைப்பயன் பெறுவார்கள். பெண்கள் தாய்வீட்டு கூடுதல் அன்பு, பாசம் கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோர், ஆசிர்யரின் வாழ்த்து பெறுவர்.
சந்திராஷ்டமம்:
27.10.13 முதல் 28.10.13 அன்று இரவு 8.43 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் வீண்வாக்குவாதங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
மகரம்:
இந்த வாரம் எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்வில் சில மாற்றங்களைப் பின்பற்றுவீர்கள். சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் உண்டாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவதால், பயணம் இனிமையாகவும் ரிஸ்க் இல்லாமலும் அமையும். பூர்வீக சொத்திலிருந்து வருகிற வருமானம் அத்தியாவசிய செலவுக்கு உதவும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு சலுகைப் பயன் பெற யோகம் உண்டு. பெண்கள் குடும்பத்து மங்கல நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு வழிபாடு செய்வர். மாணவர்கள் படிப்பு, விளையாட்டுகளில் உரிய கவனத்துடன் ஈடுபடவேண்டும்.
சந்திராஷ்டமம்:
28.10.13 அன்று இரவு 8.43 மணி முதல், 29.10.13,30.10.13 மற்றும் 31.10.13 அன்று காலை 6.03 மணி வரை உள்ளது. இந்த சமயத்தில் யாருடனும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். பயணங்களையும் தவிர்கக்வும்.
கும்பம்:
குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், ஒற்றுமை சீராக அமையும். பண வரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள்.மனதில் ஆன்மீக நம்பிக்கை வளரும். வாகன பராமரிப்பு மேற்கொள்வது நன்மை தரும். பிள்ளகள் வேத சாஸ்திர அறிவில் முன்னேற்றம் காண்பர். எதிரியிடமிருந்து விலகுவதல், நேரம் வீணாகாமல் தப்பிப்பதோடு, நற்பெயரையும் பாதுகாத்துக்கொள்ளலாம். இல்லறத்துணையின் செயல்படுகளில் குளறுபடிகள் தென்படும். ஆனால், அவற்றைக் குறை சொல்லிப் பேச வேண்டாம். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். இயந்திர தொழிற்சாலைப் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்க நகைகளை இரவல் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. மாணவர்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்:
31.10.13. அன்று காலை 6.03 மணி முதல் 1.11.13 மற்றும் 2.11.13 அன்று பகல் 12.56 மணி வரை உள்ளது. இந்த சமயத்தில் யாருடனும் வீண்வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை ஒத்திப் போடவும். பயணங்களையும் தவிர்க்கவும்.

மீனம்:
மன உறுதியுடன் செயல்பட்டு வாழ்வில் சில மாற்றம் கொண்டுவருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வீண் அலைச்சல் என்று பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் சொல்லும் செயலும் சிறப்பாக அமைந்து பெருமை தேடித் தரும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். முன்னோர் செய்த நல்வினைப் பயன் வந்து சேரும். எதிரி வியந்து வ்லகுகிற புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணையின் எண்ணங்களை மதித்து நடப்பீர்கள். தொழிலில் தாமத நிலை விலகி வளர்ச்சி கண்கூடாகத் தெரியும். பணியாளர்கள் நிர்வாகத்திறனை வளர்த்து மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவார்கள்.குடும்பப் பெண்கள் பொறுப்புடன் நடந்து குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். மாணவர்கள் ஞாபகத் திறன் வளர்ந்து படிப்பில் சாதனை இலக்கை எளிதாக அடைவர்.
சந்திராஷடமம்:
2.11.13 அன்று பகல் 12.56 மணி முதல், 3.11.13 மற்றும் 4.11.13 அன்று மாலை 5.36 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் யாருடனும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளையும் தள்ளிப்போடவும். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ ரூ. 950/- செலுத்தி, உங்கள் ஜாதகத்தின் முழுப் பலனையும் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்]
*****************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)